சிறுபான்மையின மாணவ/மாணவிகளுக்கு மத்திய அரசின் பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகைகள் வழங்கப்படுகின்றன.
இம்மூன்று உதவித்திட்டங்கள் குறித்து இக்ரா கல்வி சங்கத்தின் நிர்வாக அலுவலர் ஏ.தர்வேஷ் முஹம்மது, தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறையிடம் - தகவல் அறியும் சட்டத்தின் கீழ் - வினவி இருந்தார். அதற்க்கான பதில்கள் தற்போது பெறப்பட்டுள்ளன.
1) மத்திய அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு என மூன்று திட்டங்கள் அமல்படுத்தியுள்ளது. அவைகள் - பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகைகள் ஆகும்.
2) விண்ணப்பங்கள் பொதுவாக ஆகஸ்ட் மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு ஆகிய திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 10 வரை பெறப்பட்டன. தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13 வரை பெறப்பட்டன.
3) இம்மூன்று திட்டங்களின் பயனாளிகள் எண்ணிக்கை :-
(a) பள்ளி படிப்பு
(i) கிருஸ்துவர் - 85,254
(ii) முஸ்லிம் - 86,386
(iii) சீக்கியர் - 1
(iv) புத்த மதத்தினர் - 2
(v) பாரசீகர் - 0
(b) பள்ளி மேற்படிப்பு
(i) கிருஸ்துவர் - 20,226
(ii) முஸ்லிம் - 17,077
(iii) சீக்கியர் - 0
(iv) புத்த மதத்தினர் - 0
(v) பாரசீகர் - 0
(c) தகுதி மற்றும் வருவாய் அடிப்படை
(i) கிருஸ்துவர் - 399
(ii) முஸ்லிம் - 366
(iii) சீக்கியர் - 1
(iv) புத்த மதத்தினர் - 1
(v) பாரசீகர் - 1
4) கல்வி உதவித்தொகை பெறுவதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு:-
--- குறைந்த பட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்
--- பள்ளிப்படிப்பு (1ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை)
பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் - ரூபாய் 1 லட்சம்
--- பள்ளி மேற்படிப்பு (11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை)
பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் - ரூபாய் 2 லட்சம்
--- தகுதி மற்றும் வருவாய் அடிப்படை (தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி)
பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் - ரூபாய் 2.5 லட்சம்
தகவல்:
ஏ.தர்வேஷ் முஹம்மது,
நிர்வாக அலுவலர், இக்ரா கல்விச் சங்கம்.
|