பன்னிரண்டாம் வகுப்புக்கான அரசு பொது தேர்வில் கணிதப்பாட தேர்வுகள் மார்ச் 17 அன்று நடந்தது. அத்தேர்வில் கேட்கப்பட்ட சில கேள்விகள்
குழப்பமாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். அதனை விசாரித்த அதிகாரிகள், 3 ஒரு மதிப்பெண் கேள்வியும், 2 ஆறு மதிப்பெண்கள்
கேள்வியும், 1 பத்து மதிப்பெண்கள் கேள்வியும் தெளிவாக இல்லை என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு, அக்கேள்விகளை மாணவர்கள் முழுவதுமாக தீர்க்காவிட்டாலும், தவறாக பதில் எழுதியிருந்தாலும்,
அதற்க்குரிய மதிப்பெண்களை வழங்கும்ப்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாக Times of India நாளிதழ் இன்றைய சென்னை பதிப்பில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து www.chennaionline.com என்ற இணையதளம் செய்தி ஒன்றில், மே 14
அன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும், மே 25 அன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும்
- தேர்வுத்துறையை மேற்கோள்காட்டி - தெரிவித்திருந்தது.
இன்றைய தினகரன் நாளிதழ், முதற்பக்க செய்தியில் - தேர்வுத்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி - தேர்தல் முடிவுக்கு பின்னரே தேதியை அரசு முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில் விசாரித்ததில் இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
சுமார் 8 லட்ச மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக காத்துள்ளனர். தி காயல் பர்ஸ்ட் டிரஸ்ட் உடைய மற்றொரு இணையதளமான www.topperstalk.com - கடந்த ஆண்டுகளைபோல் இவ்வாண்டும், தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டுள்ளது. |