ஏப்ரல் 13 அன்று நடந்து முடிந்த தமிழக சட்டசபைக்கான தேர்தல்களின் முடிவுகள் மே 13 அன்று வெளியாக உள்ளன. இத்தருணத்தில் திருச்செந்தூர் தொகுதிக்கான முடிவுகள் 1977 ஆம் ஆண்டு முதல் எவ்வாறு அமைந்துள்ளன என தொடராக காணலாம்.
1977ஆம் ஆண்டு தமிழக தேர்தல்கள், இந்தியா முழுவதும் 1975ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரக்கால பிரகடனத்தின் (Emergency) பின்னணியில் நடைபெற்றன. தேர்தலுக்கான முறையான அறிவிப்பு (Notification) மே 11 அன்று வெளியிடப்பட்டது. மே 18 வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, மே 19 அன்று அவை பரிசீலனை (Scrutiny) செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற மே 21 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கு 1390 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திருச்செந்தூர் தொகுதியில் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். திருச்செந்தூர் தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை - 139,451 (ஆண்கள் - 67,635; பெண்கள் - 71,816).
தேர்தல் ஜூன் 10 அன்று நடைபெற்றது. திருச்செந்தூர் தொகுதியின் 150 வாக்குச்சாவடிகளில் 72,302 வாக்காளர்கள் (ஆண்கள் - 34,456; பெண்கள் - 37,846) தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.அமிர்தராஜ் - 20,871 வாக்குகளுடன், 1135 வாக்குகள் வித்தியாசத்தில். வெற்றிப்பெற்றார். ஜனதா வேட்பாளர் சுப்ரமணிய ஆதித்தன் 19,736 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் எஸ்.செய்யத் அஹ்மத் 17,441 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் விக்டோரியா 12,477 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் ஆர்.வித்யாசாகர் ஆதித்தன் 1,117 வாக்குகளும் பெற்றனர். 660 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
தமிழக அளவில் அ.தி.மு.க. கூட்டணி 144 இடங்களில் வெற்றிப்பெற்று (அ.தி.மு.க. - 130 இடங்கள் , சி.பி.எம். - 12 இடங்கள், பார்வர்ட் பிளாக் - 1 இடம், முஸ்லிம் லீக் - 1 இடம்) ஆட்சியை கைப்பற்றியது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பதவி ஏற்றார்.
தி.மு.க. 48 இடங்களில் வெற்றிப்பெற்றது.
காங்கிரஸ் கூட்டணி 32 இடங்களில் (காங்கிரஸ் - 27 இடங்கள் , சி.பி.ஐ. - 5 இடங்கள் ) வெற்றிப்பெற்றது.
ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றிப்பெற்றது.
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3]
[பாகம் 4] [பாகம் 5] [பாகம்
6]
[தொடரும்] |