காயல்பட்டினம் அரிமா சங்கத்திற்கு 2011-2012 பருவத்திற்கான புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கூட்டம் 17.04.2011 அன்று இரவு 08.30 மணிக்கு காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள செய்யித் ஆலிம் பில்டிங் கட்டிடத்தில் நடைபெற்றது.
அரிமா மாவட்ட நிர்வாகி ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைவராகவும்,
ஹாஜி வி.ஐ.புகாரீ, ஹாஜி சாமு, ஹாஜி ஆர்.பி.சம்சுத்தீன் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும்,
வி.டி.என்.அன்ஸாரீ நிர்வாகச் செயலராகவும்,
துளிர் எம்.எல்.ஷேக்னாலெப்பை செயல் செயலராகவும்,
ஜுவல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |