Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:16:57 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6029
#KOTW6029
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 23, 2011
புதிய மின் கட்டணம் முறையால் குழப்பம்: பழைய முறையே தொடர வலியுறுத்தல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3587 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

புதிய மின் கட்டணம் செலுத்தும் முறையால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே, மீண்டும் பழைய முறையையே அமல்படுத்த வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ஆ.சங்கர் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மின்சார கட்டணம் செலுத்துவதில் குளறுபடி நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை இருந்து வந்தது. முதல் மாதம் கணக்கெடுக்கப்பட்டால், அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.

இதில், எவ்வித குழப்பமும் இல்லாமல் பொதுமக்கள் சிரமமின்றி மின் கட்டணம் செலுத்தினர்.

இதில், 15ஆம் தேதிக்குள் மின் கட்டணம் கட்டத் தவறியவர்களுக்கு மட்டும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் தமிழக அரசு புதிய மின் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்தது. இதில், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கெடுத்து, கணக்கெடுத்த தேதியில் இருந்து 20 நாள்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று புதிய உத்தரவை பிறப்பித்தது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தது. மின் கட்டணம் கணக்கெடுப்பவர்கள் எந்த நேரத்தில் வருவார்கள் என்பது தெரியாததால் மின் நுகர்வோர், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பைத் துண்டித்து அபராதமும் விதிக்கின்றனர். இதனால், மின்வாரிய ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

எந்த நேரத்தில் மின் கட்டணம் கணக்கெடுக்கிறார்கள். எத்தனை தினங்களுக்குள் செலுத்த வேண்டும் என்பதை மின்வாரியம் தெளிவாக தெரிவிக்க வேண்டும். விவரம் தெரியாத மக்கள் மின் கட்டணம் செலுத்துவதில் குழப்பமடைந்துள்ளனர்.

இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய நடைமுறைப்படி 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுத்து மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கு முன்பு இருந்ததை போல மாதத்தின் 15ஆம் தேதியை மீண்டும் மின் கட்டணம் வசூல் செய்வதன் கடைசி நாளாக அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றி:
தினமணி நாளிதழ் (நெல்லை பதிப்பு - நாள்: 23.04.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Knowledge
posted by Ibrahim (Chennai) [23 April 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 4094

Ada.. Arivukettavaingala. Unit cost will cumulated for Two months if old method would followed by us. Where we've to go and tell this issue?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Online Payment
posted by Javed Nazeem (Chennai) [23 April 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 4099

I live in Chennai and for nearly two years, I pay online – haven’t faced any issues. This some what removes the worry of when the measurement is taken, when we need to pay etc. Just now I checked and I think we can pay online for our town too. I’m not sure if people are already aware and I am giving a late info – but in Chennai too, many people are still unaware of this facility. This may solve the issues of at least those who have access to the net.

The procedure is:

1. Go to: https://www.tnebnet.org/awp/TNEB/.

2. Create a new user ID

3. Once in, go to add service number. Select Tirunelveli, from the pull down menu and give the service number.

(Regions are available here:

https://www.tnebnet.org/awp/TNEB/templates/Region_latest1.pdf)

4. Once the measurement is done, data will be updated in the website. We will be intimated through mail in a couple of days.

5. Go to the website again and pay. The payment options are limited – no HDFC / HSBC as of now, but ICICI netbanking is available.

6. Once paid, you can get it printed. (I normally print it to a pdf and store the soft copy. Get PDF Creator from this link: http://sourceforge.net/projects/pdfcreator/ Install it to print to a PDF)

It’ll be nice if some body from our town already using this facility can write about their experience or pls try this and update here.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அதிகமான தொல்லைகள் ஏற்படும்.
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [23 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4100

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நமது பகுதியில் இந்த புதியமுறை நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றாலும்கூட பொதுவாக இந்த புதிய முறை மக்கள் மத்தியிலே அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. நடைமுறையில் உள்ள பழைய முறையே எல்லா வகையிலும் சிறந்ததாக தெரிகிறது.

இரண்டு மாதங்களுக்கொருமுறை பணம் கட்டுவது பழக்கத்தில் உள்ளதால் அதில் எந்த சிரமமும் தெரிவதில்லை. ஒரு மாதம் விட்டு, மறுமாதம் 15 ம் தேதி மின் கட்டணம் கட்ட கடைசி தேதி என்பதை எல்லோரும் அறிந்து முறைப்படுத்தி வருகின்றனர்.
------------------------------------
புதிதாக உள்ள நியமம்படி மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கு எடுத்து அதிலிருந்து 20 நாட்களுக்குள் கட்டணத்தை கட்ட வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒத்துவராது காரணம்,
மின் கணக்கு எடுப்பவர் எந்த தேதியில் வருவார் என்பதை எப்படி தெரிந்துக் கொள்வது?

அவர் வந்தபோது வீட்டில் ஆள் இல்லை என்றால் எப்படி? எந்த கணக்கை வைத்து கட்டணம் கட்டுவது?

அப்படி விடுபட்டவர்களுக்கு பணம் கட்ட கடைசி நாள் எது? எப்படி எதை வைத்து கணக்கிடுவது?

கணக்கெடுக்கப்படவில்லை என்றால் அந்த மாதம் பணம் கட்ட வேண்டாமா?

அப்படி எத்தனை மாதத்திற்கு பணம் கட்டாமல் நிலுவையில் வைத்திருக்கலாம்?? இப்படி பல கேள்விகள் உதயமாகிறது.
------------------------------
ஒவ்வொரு மாதமுமோ அல்லது இரண்டு மாதத்திற்கொரு முறையோ எப்படி கணக்கெடுத்தாலும் சரி, பணம் கட்டவேண்டிய கடைசி தேதியை இப்பொழுது இருப்பது போல் ஒவ்வொரு மாதமும் 15 என்றோ அல்லது 20, 25 என்று ஏதோ ஒரு தேதியை முடிவு செய்து மக்களுக்கு உறுதிப்படுத்தினால் நல்லது.

அப்படி செய்தால் ஒவ்வொரு மாதமும் கடைசி நாள் வரும் முன்பே பணம் கட்ட வசதியாக இருக்கும். மின் கணக்கு எடுக்கப்படாமல் இருந்தால் கூட, மக்களே மின் வாரியத்திற்கு வந்து முந்திய மாத கணக்குப்படியோ அல்லது எது விதிமுறையோ அதன்படி பணத்தை செலுத்தி மின் இணைப்பு துண்டிக்கப் படுவதை தவிர்த்துக்கொள்வார்கள்.
------------------------------------------
தமிழ்நாடு மின் வாரியமே!

ஒவ்வொரு மாதமும் மின் கணக்கு எடுத்து கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் - கணக்கு எடுப்பவர், அதை பதிகிறவர், பணம் வசூல் செய்பவர் இப்படியாக ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு மடங்கு ஆட்களை நியமிக்க வேண்டியதிருக்கும்.

அதிக ஆட்கள் நியமிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் கணக்கு எடுப்பதிலும் - பணம் கட்டுவதிலும் அதிகமான தொல்லைகள் ஏற்படும். அதனால் மக்களுக்கும் ஏன் மின் வாரிய ஊழியர்களுக்கும்கூட மன உளைச்சல் ஏற்படும்.

எனவே இவைகளை எல்லாம் மனதில் நிறுத்தி மக்களுக்கும் உங்களுக்கும் உபயோகப்படுகிற நல்ல திட்டமாக திருத்தி செயல்படுத்துவீர்களாக. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. E B BILL CONFUSION
posted by MAHMOOD RAJVI (KAYALPATNAM) [24 April 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 4104

அஸ்ஸலாமு அலைக்கும்......

மாதாமாதம் மின்கட்டணம் செலுத்தும் முறையே சிறந்த முறையும் பணமும் மிச்சப்படும் ஏனென்றால் நாம் பயன்படுத்தும் மின்சார யூனிட்டின் அளவு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடும் போது விகிதாச்சார அடிப்படையில் அதிக பணம் கொடுக்க வேண்டும் சில யூனிட்டுகள் தாண்டும் போது அளவிடும் தொகையும் மாறும் (உ.ம். 100யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 50பைசா என்றால் அதற்கு மேல் உள்ள யூனிட்களுக்கு தொகை கூடும்). இப்படி இருக்கையில் 2 மாதங்களுக்கு ஒரு முறை பணம் செலுத்தும் முறை நுகர்வோருக்கு இழப்பாகும்.

எனவே ஒவ்வொரு மாதம் பணம் செலுத்தும் முறைதான் நல்லது. ஆனால் அதனை பொதுமக்கள் சிரமப்படாதவாறு நடைமுறைபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

நன்றி! வஸ்ஸலாம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Concerns on the new payment method
posted by Javed Nazeem (Chennai) [24 April 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 4105

Monthly payment is good on the commercial angle, but other concerns exist. At least they shall have a fixed date for payment.

Dear brother N.S.E.Mahmood, you have given a very good list of concerns. I have posted them to the EB through my ID. Let me check if they respond.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Online Payment
posted by Ibrahim (Chennai) [24 April 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 4111

Babu Kaka

As I am a kayalite living in Chennai around 4 Years. Paying my hometown bill through this gateway when the service has been started to pay online. Timesaving rather than wait for long Q in our Kayal remote loc. I am expecting the LPG online service too soon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Thanks
posted by Javed Nazeem (Chennai) [24 April 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 4124

Thanks for the update. I had a doubt that I am posting some thing which was already in practice. Those who are not using this facility, pls try this at the earliest.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Thank you
posted by Husain Noorudeen (kayalpatnam) [27 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4137

Thank you Nazeem for the online payment information and also to brother Ibrahim for conforming the use of it.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Invalid Service No.
posted by Husain Noorudeen (Kayalpatnam) [27 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4138

I tried to register for the online payment at the given website. Unfortunately, I couldn't complete the process, since I was repeatedly getting error information on the service no. input. Could somebody guide me. I do not see any help or guideline in that website to complete the registration.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இன்று (24/04) நகரில் மிதமழை!  (24/4/2011) [Views - 3110; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved