1. எப்போது பொறுப்பு வரும்?? posted bymauroof (Dubai)[24 April 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4109
நகரில் தரத்தில் குறைவான சாலைகள் போடப்படுவது ஒரு புறம் எனில் போடப்படும் சாலைகள் வெகு விரைவில் நாசம் அடைவதற்கு இது போன்ற பொறுப்பற்ற செயல்களே பெரும்பான்மையான காரணமாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் தயவுசெய்து ஊரின் நன்மை கருதி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நகரின் பெரும்பான்மையான தெருக்களில் தூசு மாசு இல்லாது நடக்க முடியவில்லை. இதனால் வரும் நோய்களை பற்றி ஏன் நாம் சிந்திப்பதில்லை?
கருத்துப்புயல் சகோ. ஜியாஉதீனின் கருத்து எதிர்பார்க்கப்படுகிறது.
2. கருத்துப்புயல் சகோ. ஜியாஉதீன் posted bysyed Hasan (Khobar)[24 April 2011] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4113
கருத்து புயல் , தாமிரபரணி புயல்ன்னு எங்கள் காக்க ஜியாவை சாட்சிபுடாடீங்க . அவர் பாட்டிற்கு நல்ல கருத்துகளை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
அவர் சபை ஞானம் தெரிந்தவர்.அவர் கருத்தை எடிட்டிங் பண்ணாம போட்டால் நல்லா இருக்கும்.
4. நாங்க என்ன செய்ய? posted byhasbullah mackie (dubai)[24 April 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4116
மழை அதிகமாகப் போச்சு. அதனால தான் இப்படீ ஆகிப்போச்சு.
மன்னிச்சுக்கங்க. நாங்க ஓரமாகத்தான் போடச்சொன்னோம் ஆனால் அந்த
டீரைவர் செய்த வேலை இப்படீ கேவலப்படுத்துறாங்களே.
இந்த ஸாலிஹ் காக்காக்கு எப்பவும் இதே வேலை தானா?
5. இந்த பிரச்சனையும் ஒரு சமுக பிரச்சனைதான் posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[24 April 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4117
அப்பப்பா. சும்மா இருந்த வாய்க்கு சவைப்பதற்க்கு நல்ல அவல் கிடைத்து விட்டதா.போட்டு தாக்குங்க.
இப்படிதான் வடிவேலுவை வைகைப்புயல் அப்படி, இப்படி என்று உசுப்பு ஏற்றி கடைசியிலே ரிஷிவந்தத்தில் செருப்புஅடி வாங்க வைத்து விட்டார்கள். அதுமாதிரி நம்மளை வைத்து காமடி, கீமடி ஏதும் பண்ணவில்லையே. சரி மேட்டர் முதலில்.
இந்த பிரச்சனையும் ஒரு சமுக பிரச்சனைதான்.
அவர்கள் ரோட்டை அடைத்து மண்ணைப்போட்டது தவறு தான், ரோட்டை அடைத்து காங்ரீட் மிசின் வைத்து வேலைப்பார்ப்பது தவறுதான், அத்துடன் அவர்கள் நம் ஊரில் வீடு கட்டுவதும் மகா தவறு தான்.தெருவை அடைத்து கல்யாண விருந்து போடுவது தவறு தான்.
சரிங்க அப்போ இதற்க்கு என்ன தீர்வு? சிறிய தெருவில் வீடு கட்டுபவர்கள் என்ன செய்வது. சிறு சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். இது நம் வீடு,நம் சகோதரர் வீடு என்றால் எப்படி பொறுமையாக இருக்கின்றோமோ அதுமாதிரி இருந்து விட வேண்டியது தான்.
ரோட்டின் ஓரமாக தட்டலாம் என்றால், அடுத்த வீட்டுக்காரர் சண்டைப்போடுகிறார், அதற்கும் மேலாக அவர் வீட்டு சுவற்றிலே "இங்கு மனல்,செங்கல்,கற்கள் போடக்கூடாது" என்று பெயின்டரைக் கொண்டு அழகாக எழுதிவைத்து உள்ளார்கள். அப்போ எப்படி தான் வீடு கட்டுவது.
இதற்க்கு அருகில் நம் மொகுதூம் பள்ளி கட்டும் போதும் இதே சிரமம் இருந்தது தான், அதை நாம் இப்படி போட்டோ பிடித்து செய்தி போட்டோமா? இல்லையே..!! ஏன்.?. அது இறைவனின் வீடு, நாம் அனைவர்களும் இறைவனுக்காக கட்டும் வீடு. எந்த சிரமம் வந்தாலும் சகிப்புத்தன்மையுடன் இருந்தோம் அல்லவா. அல்லாஹ் விடம் நற்கூலி கிடைக்கும் என்றுதானே. அது மாதிரி மற்றவர்களுக்கும் உதவி செய்து, சகிப்புத்தன்மையுடன் இருப்பதற்கும் கூட நற்கூலி உண்டு.
அப்படி என்றால் இதற்க்கு விடிவு காலம்......, சொல்லுங்களேன் நானும் தெரிந்துக் கொள்கிறேன், நல்லவைகளாக இருந்தால் முயற்ச்சித்துப்பார்க்கலாம்.
இல்லை என்றால் நகராட்சி இடம் சொல்லி இதனை நாட்களுக்குள் மண்ணை அள்ளி விட வேண்டும், ரோட்டு ஓரத்தில் இப்படி இப்படி தான் கற்களை வைக்கவேண்டும், வீடு உடைத்த கற்களை இதனை நாட்களுக்குள் எடுத்து விடவேண்டும் என்று சட்டம் போடலாம்
மற்ற சகோதரர்கள் கமெண்ட்ஸ் தட்டும் போது, நாம் வீடு கட்டினால் என்ன நிலை என்று சிந்தித்து தட்டவும்.
வீடு கட்டுபவரின் வலி அவருக்குத்தான் தெரியும், முட்டை விடும் கோழியைப் போல.
7. மாற்று வழிகளும் சட்டங்களும் உண்டு posted bymauroof (Dubai)[24 April 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4120
சகோ. ஜியாவுதீனின் மிக ஆழமான கருத்தை படித்தோம். இதற்கான மாற்று வழிகளும் உண்டு. நகாரட்சியில் சட்டமும் உண்டு. ஆனால் யாரும் செயல்படுத்துவதுதான் இல்லை. மாற்று வழிகளை சொல்லுங்களேன் என்று கருத்து சொல்பவர்களிடம் கேட்பது தவறில்லை. ஆனால் சொல்பவரை விட கட்டுமானம் கட்டுபவர்களுக்கு நன்கு தெரியும் அது பற்றி. இது போன்ற விஷயங்களில் நேரில் கருத்து சொல்லி மரியாதை போனதுதான் மிச்சம்.
8. முழுசாவா அடைச்சிட்டோம்...? (?!) posted byvsm ali (Kangxi, Jiangmen, China)[25 April 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 4125
அன்பான kayal.com வாசகர்களுக்கு,
நான் சில வாரங்களுக்கு முன் ஊர் வந்தபோது இதுபோன்ற காட்சிகளை படம் பிடித்து, இதை kayal.com இல் பிரசுரியுங்கள் என்று salih காக்காவுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் காக்கா அவர்கள் என்ன காரணத்தினாலோ அதை பிரசுரிக்கவில்லை. ஒரு வார காலத்தில் என்னுடைய motor bike பலமுறை பழுதாகி விட்டது.
லாரி டிரைவர்கள், கற்கள், மணல்களை இதுபோன்று ரோட்டில் கொட்டிவிட்டு, அடுத்த வேலைக்காக சென்றுவிடுவார்கள். அவர்கள் மீது குறை ஏதும் சொல்ல முடியாது. வீட்டு உரிமையாளர்தான் அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி நிர்வாகத்தினருக்கு,
கற்கள், மணல் ரோட்டில் கொட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை வரைமுறை செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்தில் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். மீறுபவர்களுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்க வேண்டும்.
புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு,
வீடு கட்டும்போது சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக மற்றவர்களை சிரமப்படுத்தினால் எப்படி? தயவு செய்து சமூகத்தோடு ஒத்துழையுங்கள்.
(ஹ்ம்ம்மம்ம்ம்ம் என்னத்த சொல்றது . "நாங்க நாங்களாத்தான் இருப்போம். மாறவே மாட்டோம்" என்று சொல்றது என் காதில் விழத்தான் செய்கிறது. salih காக்காதான் ரொம்ப பாவம், இது போன்ற காட்சிகளை படம் பிடித்து பலருடைய சாபத்திற்கும் ஆளாகி விட்டார்.)
9. பரந்த மனப்பான்மை வேண்டும் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[25 April 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4129
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர் ஸாலிஹ் அவர்கள் இரண்டு படங்களை போட்டு அதன் தெருவையும், தேதியையும் எழுதி - அதற்கு வசனம் எழுதாமல் புதிய முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த தளத்தில் வரும் வசனக்கருத்தாக்களே! வசனம் எழுதுங்கள் வசை பாடாதீர்கள்.
--------------------------------------
சகோதரர், ஓர் உதாரணத்திற்காகத்தான் இந்த இரண்டு படங்களையும் போட்டிருக்கிறார்.
இதிலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு இடையூறுகளும் மறுநாளே அகற்றப்பட்டுவிட்டது அல்ஹம்துலில்லாஹ்.
முதல் படத்தில் உள்ள மண் ஓட்டுனர் செய்த தவறு என்றும், இரண்டாவது படத்தில் உள்ள கல், மண் இட நெருக்கடி காரணம் என்றாலும் அன்றே அவர்கள் கான்க்ரீட் போடும் இயந்திரத்தை கொண்டுவந்து வேலையை துரிதமாக செய்து முடித்து இருப்பதும் தெரிய வருகிறது.
---------------------------------------
வீடு கட்டக்கூடியவர்கள் செங்கற்கள், ஜல்லி கற்கள் , மண் என நடு ரோட்டில் கொட்டுகிறார்களே! என்று பலரும் வருத்தப்படுகிறார்கள் உண்மைதான்.
ஆனால் வீடு கட்டக்கூடியவர்கள் திறந்த வெளியில் / பெரிய மைதானத்தில் வீடு கட்டினால் கல்லையும், மண்ணையும் ரோட்டில் கொட்ட மாட்டார்கள்.
நம்முடைய தெருக்கள் எல்லாம் அகலமில்லாமல் சிறிய தெருக்களாக இருப்பதால் கல், மண் போன்றவைகளை கொட்டும்போது அவைகள் போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
எல்லோருமே கல்,மண் போன்றவைகளை தெருக்களிலேதான் கொட்டியாக வேண்டிய நிலை, அதை தடுப்பதற்கு எந்த வழியுமில்லை. ஆனால் அவைகளை முறைப்படுத்த வழிகளுண்டு.
----------------------------------------
எந்த வீட்டுக்காரரும் இப்படி நடுத்தெருவில் கொட்ட ஆசைப்படமாட்டார்கள். அப்படிக் கொட்டினால் , வாகனங்களால் இங்கும் அங்குமாக அவைகள் சிதறடிக்கப்பட்டு அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். அப்படி தனக்குத்தானே நஷ்டத்தை ஏற்படுத்த யாரும் விரும்புவாரா?.
இப்படி நடுத்தெருவில் கொட்டிவிட்டு செல்வது வாகன ஓட்டிகள்தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி கல், மண் வாங்குபவர்களிடம் கறாராக பேசவேண்டும் - தெருவில் இடையூறு ஏற்படுகிற மாதிரி போட்டு சென்றால் பணம் அல்லது கூலி தரமாட்டோம் என்று.
அப்படியும் ஒரு வேளை நடுத் தெருவில் போட்டுவிட்டு சென்று விட்டால் அதை நாம்தான் கூலிக்கு ஆள் வைத்து உடனே சரி செய்ய வேண்டுமே தவிர, பொது மக்களுக்கோ வாகனங்களுக்கோ இடையூறு வருகிற விதமாக விட்டு வைக்கக் கூடாது.
-----------------------------------------
அடுத்து சகோதரர் சாளை ஜியாவுதீன் அவர்கள் சொல்கிற மாதிரி அடுத்த வீட்டுக்காரர் கொடுக்கிற தொல்லை சொல்லி மாளாது. அவர் வீட்டு சுவரில் மண்ணோ, செங்கல்லோ படக்கூடாது என்பது மட்டுமில்லாமல் அவர் வீட்டுக்கருகிலும் போடக்கூடாது என்று கண்டிஷன் வேறு. இதை நம்ம ஊரில் பல இடத்தில் பார்க்கலாம்.
இந்த மாதிரியான சிரமங்கள் வீடு கட்டும்போது வரத்தான் செய்யும், பல ஆயிரங்கள் கொடுத்து கல், மண் வாங்குவோம் ஆனால் நூறு, இருநூறு கூலி கொடுத்து அதை ஓரமாக , ஒதுக்கி வைக்க சில சமயம் கஞ்சத்தனம் செய்வோம் இது சிலரிடம் உள்ள இயல்பு.
இப்படி முறைப்படுத்தி வைக்காததன் மூலம் அவர்களுக்குத்தான் நஷ்டம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். மேலும் நாம் எல்லோருமே கட்டடங்களை கட்டும்போது அடுத்தவர்களுக்கு சிரமம் கொடுத்து அவர்கள் மனம் புண் படாமல் சந்தோஷமாக கட்ட வேண்டும் அதில்தான் நிம்மதி இருக்கும். நாம் நல்லவராகவே இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரரை பகைத்து வீடு கட்டுவதில் மனம் நிம்மதி அடையாது அங்கே நாம் பொறுமையை கடை பிடிக்க வேண்டும்.
---------------------------------------
நகராட்சியின் நிர்வாகம் :-
இந்த மாதிரி இடையூறுகளை நகராட்சி நிருவாகம்தான் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.
வீடு கட்டுபவர்களுக்கு பல கட்டுபாடுகளை விதிக்கலாம்:-
கல்,மண் எதுவாக இருந்தாலும் வாகனங்கள் செல்லும் பாதையை ( சிமெண்ட் , தார் ரோடுகளை ) தொடாமல் போடவேண்டும்.
வீடுகளின் சுவர்களை தொடாமல் ஓர் அடி இடை வெளி விட்டு முறையாக வைக்கவேண்டும்.
எந்த விதத்திலும் வீடுகளின் வாசல்களை மறைக்காமலும் , முடுக்குகளின் பாதையை மறைக்காமலும் இருக்க வேண்டும்.
செங்கற்கள் முறையாக அடுக்கப்பட வேண்டும் , சரிந்து விழுந்து சிறுவர்களுக்கோ - பாத சாரிகளுக்கோ விபத்து ஏற்பட்டுவிடக் கூடாது.
சாரங்கள் கட்டும்போதும் கூட தெருக்களில் நீட்டிக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது. சிமெண்ட், தார் ரோடுகளை தோண்டி சாரங்களை நட்டக்கூடாது என்பது போன்ற விதிகள் வேண்டும்.
வீடுகளை இடித்த கற்களை தெருக்களிலே குவித்து போட்டு இடையூறு செய்யாமல் அதற்கென்று ஒரு வரைமுறை ஏற்படுத்தி - கால கெடுவும் கொடுக்க வேண்டும் இத்தனை நாட்களுக்குள் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று.
இந்த மாதிரி பல விதிகள் இருக்கத்தான் செய்யும் ஆனால் நம் நிர்வாகம்தான் காலாகாலமாக செயல்படுத்துவதில்லை என்று நினைக்கிறேன்.
விதிகள் இருக்கோ! இல்லையோ!! இனியாவது புதிதாக விதி முறைகளை நேர்மையான முறையில், நம்முடைய ஊரின் கலாச்சாரத்தையும் மனதில் கொண்டு உருவாக்கி ஏற்றத்தாழ்வு இல்லாமல், பாகுபாடு பார்க்காமல் செயல்பட்டால் ஊருக்கும் நல்லது நமது சமுதாயத்திற்கும் நல்லது.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் ஊர் மக்களுக்கு பரந்த மனப்பான்மையை கொடுத்து ஒற்றுமையாக வாழ கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
10. ஒரு ஹதீது ஞாபகத்துக்கு வருது posted byhasbmackie (Dubai)[25 April 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4130
வழியில் கிடந்த முள்ளை எடுத்து ஓரத்தில் போட்ட
ஓரு அணிலின் செயலை பாராட்டினார்கள் நபியவர்கள்
ஆனால் ஓரு தெருவை முழுவதுமாக அடைத்து பொது மக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவது முறையல்ல.
சில வீடுகளின் உயரம் பணிந்து இருக்கலாம் ஆனால் லாரியின் உயரமோ இவர்கள் நடு இரவில் வந்து மண்ணை கொட்டி விட்டுச்செல்வார்கள். ஆனால் வீட்டு உரிமையாளர்கள் இதை கண்டு கொள்வதில்லை. அதனால் தான் இந்த நிலை.
பொது மக்களுக்கு ஓரு வேண்டுகோள். அதற்குரிய வேலைகளை முற்கூட்டியே ஏற்பாடு செய்து அதற்கு முந்தைய இரவில் இறக்கினால் இதைப்போன்ற பொது மக்களுக்கு
ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
11. குறை? நிறை ? posted byzubair rahman (Bangalore)[25 April 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 4131
கருத்து சொல்வதற்கும் கேட்பதற்கும் அழகுதான் ஆனால் செயல்முறை எல்லோரிடமும் வரவேண்டும். குறை கூறுகிறார்கள் என்பதை விட, நம் குறையை நிவர்த்தி செய்யும் வழி சால சிறந்தது, தனிப்பட்ட யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக பிரசுரம் செய்வதில்லை, இப்படியும் நடைமுறையில் இன்னும் இருக்கிறது என்பதுதான் செய்தி..
குறைகளை நாம் ஏற்படுத்தி விட்டு, ஊர் நிர்வாகம் சரி இல்லை என்று நாமேதான் அவர்கள் மேல் குறையும் சொல்லுவோம்.
என்னதான் இருந்தாலும்......
(நம் மதிப்பிற்குரிய ஜனாப் sk ஸாலிஹ் காக்காவை குறை சொல்வது தவறு???)
12. சாட்டையை சுற்றுங்கள் posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்.)[25 April 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4132
நேற்று இரவு நம் வலைதளத்தை(KAYALPATNAM.COM) திறந்தால் வேலை செய்யவில்லை, ஒரே அதிர்ச்சி. இப்படி என்றும் ஆகாதே என்று நோண்டிப் பார்த்ததில் வந்த செய்தி "இந்த வலைத்தளம் ஹாக்(HACK) செய்யப்பட்டு உள்ளது, தாங்கள் சிறிது நேரம் கழித்து ஹாக் செய்ய முயற்ச்சிக்கவும்" என்றவுடன் மீண்டும் அதிர்ச்சி.
மீண்டும் சிறிது நேரம் கழித்து அழகாக, இரட்டை ஜடை பின்னி,பூ வைத்து, பவுடர் பூசி, லிப்ஸ்டிக் விட்டு, கண்ணுக்கு மை வைத்து புது பொண்ணு போல மெதுவாக டவுன்லோட் ஆனதைப்பார்த்து இன்ப அதிர்ச்சி. இதுதான் புதுப்பொலிவோ. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..
எங்கு பவுடர் பூச்சு அதிகம், லிப்ஸ்டிக் எப்படி என்பதை பார்த்து பார்த்து கருத்து சொல்கிறோம். சரியா.
அடுத்து, சகோதரர்கள் VSM Ali, Mauroof அவர்களின் கருத்துக்கு நன்றிகள். மாற்றுக்கருத்துக்கு இடமில்லைதான். நம் நகாரட்சியில் சட்டமும் உண்டுதான். யார் பின்பற்றுகிறார்கள்?.
தெருவை அடைத்து மேடை போட்டு நிகாஹ் நடக்கிறது, சட்டத்தில் இடம் இல்லை, அனால் ஸ்பெஷல் பெர்மிசன்(Special Permision),
ரோட்டை அடைத்து விருந்து வைக்கின்றோம், தவறுதான், ஆனால் ஸ்பெஷல் பெர்மிசன்.
ரோட்டை அடைத்து ரிசப்சன் (அழைப்பு) வைக்கின்றோம், தப்புதான், ஆனால் ஸ்பெஷல் பெர்மிசன்.
தெருவை அடைத்து கந்தூரி, சொற்பொழிவு வைக்கின்றோம், தவறுதான், ஆனால் ஸ்பெஷல் பெர்மிசன்.
இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் எப்படி நடத்துவது? சட்டத்தை பின்பற்றுவதா?
பெரிய தெருவுகளான கட்டு தைக்கா தெரு, தீவு தெரு, மரைக்கா பள்ளி,அப்பாப்பள்ளி தெரு போன்ற தெருவுகளில் இப்படி செய்தார்கள் என்றால் சாட்டையை சுற்றுங்கள்,ஓகே.
இல்லை, வீட்டு வேலைகள் முடிந்த பின்பும் ரோட்டில் மீதமான கற்கள், மணல்கள், செங்கல் துண்டுகள் கிடந்தால், சாட்டையை சுற்றுங்கள்,ஓகே.
கல்யாண அழைப்புக்கு-(reception), திருமணத்திற்கு என்று மணலை முடுக்கிலும், ரோட்டிலும் கொட்டி அழகு பார்கிறார்களே,அங்கு சாட்டையை சுற்றுங்கள்,ஓகே.
வீட்டை உடைத்து அந்த கழிவுகளை புதிய ரோட்டில் போட்டு, மேடாக ஆக்கி, மழை நீர் போகாமல்,அசிங்கப்படுத்துகிறார்களே, அங்கு சாட்டையை சுற்றுங்கள்,ஓகே.
சாட்டையை சுற்றுங்கள்,சாட்டையை சுற்றுங்கள் ... யார் சுற்றுவது? நாம் ஏதும் சொன்னால் சகோ.Mauroof சொன்ன மாதிரி, மரியாதை போயி, மூக்கு உடைபடுவது தான் மிச்சம். (மூக்கு உடைந்து இரத்தம் வந்தால் சீக்கிரம் நிற்காதாமே, சென்சிடிவான பகுதியாமே, அப்படியா டாக்டர் கிஜார் அவர்களே..)
ஆதலால் நமக்கு தேவை ஒரு விளக்கம், சிறிய, குறுகலான தெருவில் வீடுகட்டுபவர், அதிலும் முடுக்குக்கு உள்ளே கட்டுபவர் மணல், ஜல்லிகளை எங்கு போடுவது. இதற்க்கு விடை தெரிந்தால் சொல்லுகளேன். புண்ணியமாக போகும்.
(இந்த தடவை நம் கமெண்ட்ஸ் அதிகமாக ஆகிவிட்டதோ.. மன்னித்துக்கொள்ளுங்கள்.. ஒரு விடிவு பிறக்கட்டுமே என்ற ஆசைதான்.)
13. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு posted byMauroof (Dubai)[25 April 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4133
சகோ. N.S.E. மஹ்மூது அவர்களின் கருத்து கவனத்தில் எடுக்க வேண்டிய ஒன்று. சகோ. ஜியாஉதீனின் சாட்டை (சுற்றுதல்) சுழற்றுதல் கருத்துக்குவியல் மிகவும் அருமை. சில கேள்விகள் மிகவும் நியாயமனாதே. நமதூரில் கட்டப்படும் வீடுகள் ஒன்றும் அல்லாஹ் உதவியால் சுனாமி குடியிருப்பு போன்றதல்ல. ஆக வழிகள் பல உண்டு. அதை தேடத்தான் நம்மில் பலருக்கு நேரம் இல்லை. கிடைக்கும் வேலையாட்களும் அங்கனமே அமைகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த கருத்து பரிமாற்றுதலை இத்துடன் முழுசா முடித்திடலாமே?? சகோ. ஸாலிஹ் WHAT IS NEXT? START PLSSSSSSSSSSSS.
14. special permission என்ற ஓட்டை posted byvsm ali (kangxi , Jiangmen, China)[25 April 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 4134
சகோதரர் ஜியாவுதீன் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. நகராட்சியில் சட்டமும் இருக்கிறது, special permission என்ற ஓட்டையும் இருக்கிறது. நீங்கள் சொன்ன அத்தனையும் , ரோட்டை அடைத்து நிக்காஹ், விருந்து, வரவேற்பு போன்றவைகள், தற்கால சமூகத்தினருக்கு இடைஞ்சல் தருபவையே. இதைப்பற்றி சென்ற வருடம் "discussion board"இல் விவாதித்தோம், இதற்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு ஒருசிலர் வந்தனர்.
முன்பெல்லாம் நமதூர் சிறிய மக்கள் தொகையிலும், பெரிய அளவிலான பள்ளி வாசல்கள், திருமண கூடங்கள் இல்லாமலும் இருந்தது. எந்த ஒரு வைபவத்தையும் ரோட்டில்தான் வைக்க வேண்டிய நிலை. ஆனால் தற்போதோ பெருத்த மக்கள் தொகையிலும், பரந்து விரிந்த பள்ளிவாசல்கள், திருமண கூடங்கள் என்று நிறைய வசதிகளுடன் உள்ளோம். பெரும்பலானவர்களிடம் வாகனங்களும் உள்ளது. தற்போதும் முன்பு போலவே 'special permission" என்ற பெயரில் ரோட்டை அடைப்பது, நகராட்சியின் சட்டத்தில் ஓட்டை என்றுதான் சொல்ல வேண்டும்.
நம் மக்கள் இனிமேலாவது, அவரவர் வசதிக்கேற்ப தங்கள் ஜமாத்திற்கு உட்பட்ட பள்ளிகளில், திருமண கூடங்களில் நிக்காஹ் நடத்துங்கள். புதிதாக வீடு கட்டுபவர்கள் தயவு செய்து அடுத்தவர்களுக்கு இடையூறு இல்லாமல் உங்கள் வேலையை செய்யுங்கள். அல்லாஹ் உங்கள் இல்லத்தை "நிரப்ப"மானதாக ஆக்கி, உங்கள் மக்கள் அதில் என்றென்றும் நிம்மதியாக வாழ அருள் செய்வானாக. ஆமீன்.
(Salih காக்கா, அடுத்து ஏதாவது நல்ல படங்களை பிரசுரித்து, மக்களின் வசைபாடுகளில் இருந்து தப்பிக்க வழி தேடுங்கள்)
15. Nothing can avert posted byKN HAJI (Dubai)[27 April 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4140
Hi
Whatever rules and regulation applied nothing will change unless concern should understand how difficult for others. Examples - giving way for Ambulances, people with special needs, aged citizens etc.
Let everyone take responsility and ensure that should not affect on above circumstance. Muncipality should have always check on neatness of Roads.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross