சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் கண் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் 29.04.2011 அன்று நடைபெறுகிறது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறையருளால் எதிர்வரும் 29.04.2011 (நாளை) அன்று, “கண்களைப் பாதுகாப்பது எப்படி?” என்ற தலைப்பில் கண் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் சிங்கப்பூரிலுள்ள மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
கருத்தரங்கின் இறுதியில், கண் பாதுகாப்பு குறித்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தைச் சார்ந்த ஹாஜி பாளையம் செய்யித் முஹ்யித்தீன் நிகழ்வுகளைத் துவக்கி வைக்க, காயல்பட்டினத்தைச் சார்ந்த கண் மருத்துவ நிபுணர் டாக்டர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் முகாம், கருத்தரங்கம் மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
பெண்களுக்கு மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரையிலும்,
ஆண்களுக்கு மாலை 06.00 மணி முதல் 08.30 மணி வரையிலும்
முகாம் நடைபெறவுள்ளது.
மிகவும் அரிதாக நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்கள் தவறாமல் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. |