தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அரசு கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கைக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பிற்கு 1653 இருக்கைகளும், 8 சுய நிதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பிற்கு அரசு கலந்தாய்வின் மூலம் சேர்க்க 635 இருக்கைகளும் உள்ளன.
2. ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இருக்கைகளும், 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு கலந்தாய்வின் மூலம் சேர்க்க 891 இருக்கைகளும் உள்ளன.
3. மேற்கண்ட படிப்புகளுக்கு 2011-2012ஆம் கல்வியாண்டிற்கு மாணவர்கள் சேர்க்கைக்கான உத்தேச கால அட்டவணை கீழ்க்கண்டவாறு வெளியிடப்படுகிறது.
அறிவிப்பு வெளியிடும் நாள் - 15.05.2011
விண்ணப்பம் வழங்கும் நாள் - 16.05.2011
விண்ணப்பம் வழங்குவதற்கான கடைசி நாள் - 02.06.2011
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் - 02.06.2011
தகுதிப்பட்டியல் வெளியிடுதல் - 21.06.2011
முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கும் நாள் - 30.06.2011
இவண்,
வி. கு. சுப்புராஜ்,
அரசு முதன்மைச் செயலாளர்.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை. |