சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் கண் மருத்துவ ஆலோசனை முகாம் சிங்கப்பூரிலுள்ள மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் 29.04.2011 அன்று நடைபெற்றது.
முகாமுக்கு, மன்றத்தின் வழிகாட்டி முனைவர் எம்.என்.முஹம்மத் லெப்பை தலைமை தாங்கினார். ஜித்தா காயல் நற்பணி மன்றத்தைச் சார்ந்த ஹாஜி பாளையம் செய்யித் முஹ்யித்தீன் முன்னிலை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். டபிள்யு.கே.எம்.முஹம்மத் ஹரீஸ் கிராஅத் ஓதினார்.
பின்னர், கண்ணில் ஏற்படும் பலவிதமான நோய்கள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றைக் குணப்படுத்தலும் - வருமுன் காத்தலும் என கண் குறித்த பலவிதமான தகவல்களுடன் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையின் மூத்த கண் மருத்துவ நிபுணர், காயல்பட்டினத்தைச் சார்ந்த டாக்டர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடைபெற்ற அமர்வுகளில் அசைபட தொகுப்புகளுடன் விளக்கிப் பேசினார்.
பின்னர், கண் பாதுகாப்பு குறித்து முகாமில் கலந்துகொண்டோர் கேட்ட சந்தேகங்களுக்கு மருத்துவர் முஹ்யித்தீன் விளக்கமளித்தார்.
இறுதியாக, சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் உமர் ரிழ்வானுல்லாஹ் நன்றி கூற, சிங்கப்பூர் மஸ்ஜித் ஜாமிஆ சுலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ துஆவுடன் முகாம் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன.
முகாமில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளனைத்தையும், மன்றத் தலைவர் ரஷீத் ஜமான் தலைமையில் மன்ற அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |