ஆத்தூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள குடிநீர் தேக்கத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.
ஆத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதை குடிநீர் வடிகால் வாரியம் பராமரித்து வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகள், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று குடிநீர் சுத்திகரிப்பு நிலைய குடிநீர் தேக்கத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்துள்ளன. இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது, கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய மீன்குஞ்சுகள் விடப்பட்டதாகவும், தண்ணீர் ஒவ்வாமையால் அவை இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனராம்.
ஆனால் இறந்த மீன்களில் 2 கிலோ எடை கொண்ட மீன்களும் இருந்ததாம். மீன்கள் எப்படி இறந்தன என்ற சரியான தகவல் தெரியவில்லை. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி:
தினமலர் (02.05.2011) |