திருச்சி ஜமால் முஹம்மத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவின் வைர விழா சிங்கப்பூரிலுள்ள மஸ்ஜித் சுல்தான் கேளரங்கில் 02.05.2011 (இன்று) நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஹாஜி ஷேக் முஹம்மத் மற்றும் நிர்வாகக் குழுவினர் கலந்துகொண்ட இவ்விழாவிற்கு கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஆடிட்டர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வழிநடத்தி ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கலந்துகொண்டு, கல்லூரி முதல்வர் முனைவர் ஷேக் முஹம்மதுக்கு “உயர்ந்த கல்வியாளர்” விருது வழங்கினார்.
தகவல்:
சிங்கை காயல் நல மன்றம் சார்பாக,
V.M.M.முஹம்மத் அப்துல்லாஹ்,
சிங்கப்பூர்.
1. நல்ல செலக்சன் posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[02 May 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4206
மகிழ்ச்சியான செய்தி.
ஒரு கல்வியாளருக்கு மற்ற ஒரு கல்வியாளர் விருது வழங்குவது.. GREAT .. நல்ல செலக்சன்.. இருவருமே!!
அனைவர்களுக்கும் பாராட்டுக்கள்.
அன்புடன்,
சாளை S.I.ஜியாவுதீன்,M.C.A.,.,அல்கோபார்
- முன்னாள் ஜமால் முஹம்மத் கல்லூரி மாணவன்,
- முன்னாள் ஜமால் முஹம்மத் கல்லூரி விரிவுரையாளர்,
- முன்னாள் ஜமால் முஹம்மத் கல்லூரி விடுதி உதவிக்காப்பாளர்.
- முன்னாள்... என்ன.. என்ன. போதும்.. போதுமாவா.. சரிங்க... நிறுத்தி விட்டேன்... சொல்ல விடமாடீர்களே.
2. REPENT posted byKAVIMAGAN KADER (DUBAI)[02 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4211
ஆசிரியர், பேராசியருக்கு வழங்கும் விருது. கண்ணுக்கு விருந்து.
ஹாஜி.ஹசன் சார் அவர்கள், எத்தனையோமுறை அறிவுரை
வழங்கியும், கல்வியின் முக்கியத்துவம் புரியாமல், இறுமாந்து
திரிந்த காலத்தை எண்ணி எண்ணி வருந்துகிறேன். தன்னலம்
கருதாமல் காலமெல்லாம் கல்விக்காக உழைக்கும், அனைத்து
நல்ல உள்ளங்களுக்காகவும் துஆ செய்கிறேன்.
சாளை.ஜியாவுதீன் காக்கா அவர்களே!
உங்களது கல்வித்தகுதி, எனக்குள் பெருமையையும், பள்ளிக்
காலத்தைகூட ஒழுங்காக நிறைவு செய்யாமல், கல்லூரி வாசத்தையே நுகராமல் விட்டு விட்டேனே என்ற ஏக்கத்தையும் ஒருசேர உண்டாக்கிவிட்டது. உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
3. கலெக்டர் அவர்களின் தந்தை posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[03 May 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4220
அன்பு சகோதரர் கவிமகனுக்கு, தங்களின் ஆதங்கம், நிறைவேறாத ஆசைகளை படித்து மனதிற்கு மிகவும் சங்கடமாக ஆகிவிட்டது. படிக்காத பல சகோதரர்களின் மனநிலையை உங்களின் கருத்து பிரதிபலிக்கின்றது.
சென்ற வார பதிவில் உங்களுடைய கவிதையை ரசித்தேன் ஆனால் உடன்படவில்லை. அதில் தங்களின் பெற்றோர் உடைய ஆசை, கனவு எல்லாம் தெரிவதை தங்கள் உணரவில்லையா. மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.
http://www.kayalpatnam.com/m/shownews.asp?id=6054
இன்னும் குறைந்துவிடவில்லை, தங்களின் பிள்ளைகளை நன்கு படிக்க வையுங்க (கசக்கிபிழிய இல்லை). IAS/IPS ஆக ஆக்கி அவர்கள் நாட்டை ஆளும் காட்சியை ரசிங்க. கலெக்டர் அவர்களின் தந்தை என்று பெருமையுடன் வாழுங்கள். அல்லாஹ் உதவி புரிவான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross