சென்னையில் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதன் செயலர் ஏ.கே.பீர் முஹம்மத் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கூட்டம் நடந்த அன்று தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்க இயலாமல் போனதாகவும், எனவே தாமதமாகவே தீர்மானத்தை வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
தீர்மானங்கள் பின்வருமாறு:-
தீர்மானம் - 1
எதிர்காலத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலையில் உள்ளது. அதற்காக காயல் மஹ்பூபு, S.I.காதர் ஆகியோர் முயற்சி மேற்கொண்டு, அனிதா ராதாகிருஷ்ணன் MLA அவர்கள் மூலம் உள்ளாட்சி துறை அமைச்சர், மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை அணுகி அதற்கான திட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ரூ.32 கோடியில் திட்டம் நடைபெற்று வருகிறது. அதற்காக ஒரு மின்நிலையம் அமைக்க நமதூர் எல்லையில் 1 ஏக்கர் நிலம் தேவைப்படுவதால், நிதி, சுமார் 15 லட்சம் தேவை. அதற்காக முயற்சி மேற்கொண்டு உவைஸ் ஹாஜியார், ஹாஜி பிரபு சுல்தான், நமதூர் நகராட்சி தலைவர் ஹாஜி வாவு சேகு அப்துல் ரஹ்மான், ஃபாசி ஹாஜியார் மற்றும் நமதூர் முன்னணி தலைவர்கள் ஆகியோர் இதன் வகைக்காக ரூ.5 லட்சம் வரை நிதி வசூல் செய்து மேலும் குறைவாக உள்ள ரூ.10 லட்சம் வரை நிதி திரட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீர்மானம் - 2
நமதூர் எல்லையில் பன்நெடுங்காலம் இருந்து வருகின்ற கோசுமறை அருகில் மீனவர்கள் என்ற பெயரில் சுனாமி நிதியில் இருந்து 169 குடியிருப்புகளை சட்ட விரோதமாக நிலம் கையகப்படுத்தி மத்திய அரசு நிதி ரூ.6 கோடியில் இந்த குடியிருப்புகளை கட்டியது மட்டுமல்லாமல் நமதூர் பஞ்சாயத்தில் தீர்மானம் கூட நிறைவேற்றபடாமல் இரவு பகலாக கட்டிடம் கட்டும் வேலை நடந்து வந்த சமயம் இதை அறிந்த நமதூர் இளைஞர் சங்கங்களும், காயல்பட்டணம் ஐக்கிய பேரவையும் முயற்சி மேற்கொண்டு இந்த முயற்சியை உடனடியாய் நிறுத்தும் முகமாக கடந்த 4.1.2011 அன்று கடை அடைப்பு செய்ய மிகப்பெரிய கூட்டம் நமதூரில் நடைபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் திருச்செந்தூர் முனிசிபல் கோர்ட், தூத்துக்குடி கோர்ட், மதுரை உயர்நீதிமன்ற கிளை கோர்ட் ஆகியவற்றில் இந்த முயற்சியை நிறுத்திட சட்டப்படி முயற்சிக்கு மேற்கொண்ட நிலையில், தூத்துக்குடி கோர்ட்டில் ஒரு தடை கிடைத்துள்ளது. இது நமக்கு மனநிறைவை தருகிறது. இது தற்காலிகமானதுதான். தொடர்ந்து காயல்பட்டணம் ஐக்கிய பேரவை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த 169 குடிஇருப்புகளில், 7 பேர் மட்டும்தான் முஸ்லீம்கள். மற்ற அனைவர்களும் நமதூரை சாராதா முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்பதை பார்க்கும்போது, மிகவும் திட்டமிட்ட கொடுஞ்செயல் என்பது நமதூர் மக்களுக்கு அதிர்ச்சியையும், அனியாய செயலாகவும் நினைக்க தான் தோன்றுகிறது.
எனவே, எதிர்வரும் காலத்தில், இது எப்படி தீர்ப்பு வரும் என்பதை நினைவு கொள்ள முடியாத நிலையில், உள்ள படியால் தொடர்ந்து கோசுமறை பள்ளி அருகில் நாம் முயற்சிக்கு மேற்கொண்டு, 200 குடியிருப்புகள் கட்டி நமதூர் வீடற்ற ஏழை குமர்களுக்கு ஒதுக்கீடு செய்து வழங்கிட முயற்சி மேற்கொண்டும், நமதூரில் உள்ள தனவான்களும், நமதூரை சார்ந்த சென்னை, பிற ஊர்களில் வாழ்ந்து வரும் தனவான்களிடமும் நிதிவசூல் செய்து சுமார் 5 ஏக்கர் நிலம் வாங்கிட ரூ.50 லட்சம் வரை நிதி தேவைப்படுவதால், நாம் அனைவர்களும் இந்த நேர்மையான முயற்சிக்கு தாராளமாய் நிதி உதவி தந்திடவும், கோசுமறை பள்ளி அருகில் நிலம் நியாயவிலைக்கு இந்த முயற்சிக்கு தந்து உதவிடவும் இந்த முயற்சிக்கு வெற்றி பெற்று அல்லாஹ் கிருபை செய்திடுவானாகவும் ஆமீன்.
இம்முயற்சிக்கு காயல்பட்டினம் மற்றும் சென்னை வாழ் நமதூரை சார்ந்தவர்கள் கொண்ட 7 நபர் குழு ஒன்று அமைத்திடவும் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் - 3
நமதூரில் வசதி உடையவர்கள் நமதூரை சுற்றி வரும் ஆபத்தை உணர்ந்து, நிலம் உள்ளவர்கள் அயலூர்களைச் சார்ந்தவர்கள் என்ன விலை கிடைத்தாலும் நிலத்தை விற்க கூடாது என்பதாக இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் - 4
நமதூரில் உள்ள இ.பி. ஆபிஸ் மிகவும் தூரத்தில் உள்ளதால் பெண்கள் தூரம் சென்று பணம் செலுத்தவும், கம்பளைண்ட் செய்யவும் பல கஷ்டங்களுக்கு உள்ளிட நேறுகிறபடியால், அந்த ஆபீசையும் மின்வாரிய பொறியாளர் மற்றும் ஊழியர்களுக்கும் இல்லம் கட்டி கொடுக்க வாரியம் முன்வந்து நிலம் இல்லாததால் அந்த ஆபிஸை பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் நிலம் உள்ளதால், வரும் மே மாதம் 14ம் தேதிக்கு பின்அமையும் புதிய அரசை அணுகி இம்முயற்சிக்கு தீர்வு காண ஒரு குழு அமைத்திடவும், இதை உடனடியாய் செய்து முடித்திடவும் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் - 5
நமதூர் எல்லையில் இயங்கிவரும் DCW தொழிற்சாலை யில் கடந்த காலங்களில் நம்மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லாமலும், நமதூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் குறைந்தது 20% வேலைவாய்ப்பு இல்லாமலும், நிலவரி DCW ஆய்வுக்குழுவே ரூ.7 லட்சம் மாத வாடகை சிபாரிசு செய்தும், 1¼ லட்சம் தான் வாடகை இத்தனை ஆண்டுகளும் செலுத்தி, மீதியை வேறுவகை செலவாக DCW கணக்கு காட்டுகிறது. DCW நிர்வாகம் பணத்தை மோசடி செய்து வருவது சமீபத்தில்தான் நாம் அறிகிறோம். எனவே குறைந்தது 10 ஆண்டுகளாவது இந்த புதிய வரியை கேட்டு, அதற்காக வித்தியாச தொகையை கேட்டு பெற நாம் ஒரு குழு அமைத்திடும் கட்டாய நிலையில் முயற்சி மேற்கொள்ள இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. அத்துடன் புதிதாக ஒரு தொழிற்சாலை DCW துவங்க இருப்பதை உடனடியாய் நிறுத்திடவும் இதன் விளைவாக நமதூர் மக்களுக்கு ஏற்படும் கேன்சர் நோயை கட்டுபாட்டில் வைத்திட இந்த புதிய தொழிற்சாலை வர கோர்ட்டில் தடைகோறி வழக்கு தொடர்ந்திடவும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
செய்தி திருத்தப்பட்டது |