ஏப்ரல் 3, 2011 ஞாயிறு அன்று காயல்பட்டினம் அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்மா
பள்ளியின் விரிவாக்கப்பணிகள் குறித்த விளக்க நிகழ்ச்சி சென்னையில் MEASI பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் ஹாஜி எம்.ஐ. மீராசாஹிப் தலைமை தாங்கினார். பள்ளியின் துணை தலைவர் ஹாஜி இப்னு சவுது,
துணைச்செயலாளர்கள் ஹாஜி எல்.கே.லெப்பை தம்பி, ஹாஜி ஏ.ஏ.சி. நவாஸ் அஹமத், பொருளாளர் ஹாஜி ஹெச்.எம். கியாஸ் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளை ஹாபிழ் எம்.என். புஹாரி தொகுத்து வழங்கினார்.
ஹாபிழ் எம்.எம். முஜாஹித் அலியின் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து பள்ளியின் செயலாளர் எம்.ஐ. மீராசாஹிப் தலைமை உரை நிகழ்த்தினார்.
பள்ளியின் வரலாறு, எதிர்கால திட்டங்கள் குறித்து பள்ளியின் துணைச்செயலாளர் ஹாஜி எல்.கே.லெப்பை தம்பி உரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து பள்ளியின் துணைச்செயலாளர் ஹாஜி ஏ.ஏ.சி. நவாஸ் அஹமத் - பள்ளியின் தற்போதைய கட்டுமான நிலைக்குறித்து -
புகைப்படங்களின் உதவியுடன் விளக்கம் அளித்தார்.
பின்னர் கூடியிருந்தோருக்கு கட்டுமான நிதி திரட்டும் முகமாக உறுதி படிவம் (PLEDGE FORM) வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட படிவம் திரும்பி
பெறப்பட்டது. உறுதிக்கொடுக்கப்பட்ட மொத்த தொகை கூட்டத்திலேயே அறிவிக்கப்பட்டது.
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி செயல்பாடுகள் குறித்து ஹாஜி இப்னு சவுது
விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து இத்திஹாதுல் இஹ்வானுள் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) அமைப்பின்
செயல்பாடுகள் குறித்து அதன் செயலாளர் எஸ்.ஹெச். ஷமீமுல் இஸ்லாம் விளக்க உரை வழங்கினார்.
அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்மா
பள்ளி, இத்திஹாதுல் இஹ்வானுள் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.), ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி ஆகிய அமைப்புகளின் இணையதளங்களின் அம்சங்கள் குறித்து எம்.எம். செய்யத் இப்ராகிம் விளக்கம் அளித்தார்.
பள்ளியின் செயற்குழு உறுப்பினர் கத்தீப் முஹம்மது தம்பி நன்றி உரை வழங்கினார். கஃப்பாராவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை வாழ் ஜமாஅத்தினர் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
தகவல்:
கத்தீப் முஹம்மது தம்பி,
அலியார் தெரு. |