காயல்பட்டினம் கடற்கரையை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்துவதற்காக காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், செயல்திட்டங்களுக்கும் முழு ஒத்துழைப்பளிக்க ஆயத்தமாக உள்ளதாக 30.04.2011 அன்று நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபாயிஸீன் சங்கத்தில் கலந்தாலோசனை:
முன்னதாக, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 24.04.2011 அன்று காலை 11.00 மணிக்கு காயல்பட்டினம் மகுதூம் பள்ளியையொட்டி அமைந்துள்ள ஃபாயிஸீன் சங்கத்தில், அமைப்பின் தலைவர் மெட்ரோ நஸீர் தலைமையில் நடைபெற்றது.
துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்தின் அவசியம் மற்றும் நோக்கங்கள் குறித்து அமைப்பின் செயலாளர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ, பொருளாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
அங்கத்தினரின் நீண்ட நேர கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், காயல்பட்டினம் கடற்கரையை பொதுமக்கள் முறையோடு பயன்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 30.04.2011 அன்று காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதெனவும், அக்கூட்டத்தை காயல்பட்டினம் தாயிம்பள்ளிவாசல் வெளிப்பள்ளி வளாகத்தில் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
நகர்மன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம்:
பின்னர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி 30.04.2011 அன்று காலை 11.00 மணிக்கு காயல்பட்டினம் தாயிம்பள்ளிவாசல் வெளிப்பள்ளி வளாகத்தில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்ப்னர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் கடற்கரை பயனாளிகள் சங்கத்தால் நடத்தப்பட்டது.
தாயிம்பள்ளிவாசல் தலைவர் ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கடற்கரை பயனாளிகள் சங்க துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்தின் நோக்கம் குறித்து அமைப்பின் செயலாளர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ நகர்மன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.
கலந்துகொண்டோர்:
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான திருத்துவராஜ், காசிராஜன், சி.எஸ்.சதக்கத்துல்லாஹ், எஸ்.ஐ.ரஃபீக், மும்பை முகைதீன், ஜெய்னம்பு, எம்.கே.எஸ்.கிதுரு ஃபாத்திமா ஆகியோரும்,
ஏ.லெப்பை ஸாஹிப், எல்.எஸ்.அப்துல் காதிர், என்.எம்.அஹ்மத், பேரா.கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ ஹாஜி எம்.எம்.அஹ்மத், ஓ.எம்.முஹம்மத் அலீ ஜின்னா, ஹாஜி எல்.டி.சித்தீக், எஸ்.ஐ.செய்யித் மொகுதூம், ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஜி ஏ.கே.யாஸீன் மவ்லானா, ஹாஜி ஏ.ஆர்.தாஹா, ஹாஜி ஏ.ஆர்.இக்பால், ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், எஸ்.அப்துல் வாஹித், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ் ஆகியோரும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - விளையாட தனியிடம்:
கடற்ரையில் விளையாட கடற்கரையின் தென்புறத்தில் தனியிடம் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - பாலின அடிப்படையில் பகுதி பிரிப்பு:
கடற்கரையில் பொதுமக்கள் அமரும் பகுதியை ஆண்கள், பெண்கள், குடும்பத்தினர் என மூன்று பிரிவாக பிரித்தமைக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - வாகன நிறுத்த ஒழுங்குமுறை:
கடற்கரையில் நாற்சக்கர, இருசக்கர வாகனங்கள் நிறுத்த (பார்க்கிங்) நடைமுறைகளை சீரமைக்க முடிவுசெய்யப்பட்டது.
தீர்மானம் 4 - வணிகர்களுக்கான ஒழுங்கு நடைமுறைகள்:
கடற்ரையில் வியாபாரம் செய்வோருக்கான ஒழுங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 – பயன்பாட்டுக்கான நேர உச்சவரம்பு:
கடற்கரையை பொதுமக்கள் பயன்படுத்தும் அதிகபட்ச நேரமாக இரவு 10.30 மணி வரை நிர்ணயிப்பதென முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 6 – ப்ளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை:
ப்ளாஸ்டிக் பொருட்களை கடற்கரையில் பயன்படுத்த முழுமையாகத் தடைசெய்ய ஆவன செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 7 - தன்னார்வப் பணியாளர்களுக்கு அதிகாரம்:
கடற்ரை பராமரிப்பு விஷயத்தில் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில் தன்னார்வப் பணியாளர்களை நியமித்து, நகர்மன்றத்திலிருந்து அவர்களுக்கு உரிய அதிகாரங்களை முறைப்படி வழங்கச் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒத்துழைக்க நகர்மன்ற உறுப்பினர்கள் உறுதி:
மேற்கூறப்பட்ட அம்சங்கள் மற்றும் கடற்கரை பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக கடற்கரை பயனாளிகள் சங்கம் மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளுக்கும், அந்தந்த நேரங்களில் நடைபெறும் நகர்மன்றக் கூட்டங்களில் இதுகுறித்து தீர்மானங்களியற்றி ஒத்துழைக்குமாறு நகர்மன்ற உறுப்பினர்களிடம் கூட்டத்தில் கேட்கப்பட்டது.
அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் செய்து தருவதாக அப்போது அவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். அதற்காக கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்:
ஹாஜி L.M.E.கைலானீ,
செயலாளர்,
காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம்.
செய்தி திருத்தப்பட்டது |