அல்காயிதா இயக்கத்தின் நிறுவனரும், தலைவருமாகக் கருதப்படும் ஒசாமா பின் லாடின் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். அவரின் உடல் கடலில் அடக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிகின்றன.
இதற்கிடையில் ஒசாமாவின் இறந்த உடல் என புகைப்படம் ஒன்று உலகெங்கும் வெளியானது. இன்று இந்தியாவின் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்திலும் அப்படம் வெளியாகி உள்ளது.
ஆனால் இப்படம் பொய்யானது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரிட்டிஷ் பத்திரிக்கை கார்டியன் செய்தி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:
இப்படம் முதலில் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் வெளியானது. பின்னர் பிற ஊடகங்கள் அதனை உலகெங்கும் வெளியிட்டன. ஆனால் அப்படம் இரு படங்களின் கலவை. 1998 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒசாமா பின் லாடினின் உண்மை படமும், இறந்த வேறொருவர் படமும், இணைக்கப்பட்டு இறந்த பின் லாடின் படம் என வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் இணையதளங்களில் இரண்டு வருடங்களாக உலவி வருகிறது.
2. உறுதிப்படுத்தப் படாத உண்மை posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[03 May 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4217
நான் சொன்னேன்ல சென்ற பதிவில். இது உறுதிப்படுத்தப் படாத உண்மை.
தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் எல்லாம் கிலி பிடித்து இருக்கிறார்களாம். அதிகமான வீரர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு, நிம்மதியான தூக்கம் இல்லாமல், பிரம்மை பிடித்து இருக்கிறார்களாம். ஆகவே அந்த நாட்டை விட்டு தன் படைகள் திரும்பனும் என்றால் இப்படி ஒரு நாடகம் ஆடி "உசாமாவை போட்டு விட்டோம், அமைதி திரும்பி விட்டது, எங்களின் கடமையும் முடிந்தது ஆகவே எங்களின் படைகளை திரும்பப்பெற்றுக் கொள்கிறோம்" என்று அறிவிப்பும் வரும் பாருங்கள்.
ஒரு சின்ன திருடனை பிடித்தால் கூட அவனுக்கு அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட், DNA அது இது என்று பிரித்து மேய்ந்து விடுவார்கள். ஆனால் இவரை உடனே கடலில் புதைத்தார்களாம்.
நான் ஒன்றும் ஒசாமாவிற்கு ஆதரவோ அல்லது அமெரிக்கவிற்கு எதிரோ அல்ல. உண்மை உண்மையாக இருக்கணும். நானும் ரவுடிதான், நானும் ஜெயிலுக்கு போறேன், நானும் ஜெயிலுக்கு போறேன் என்ற வடிவேலு பாணி கூடாது. அம்புடுதான்.
3. பின்லேடன் போலவே posted byMUTHU ISMAIL (kayalpatnam )[03 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4219
அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் இறந்த உடல் என்று கூறி இணையத்தளங்களில் வெளியான படம் போலியானது என்று தெரியவந்துள்ளது.
பின்லேடன் போலவே தோற்றம் கொண்ட கொல்லப்பட்ட ஒரு நபரின் படத்தை போட்டோஷாப் மூலம் திரித்து, லேடன் கொல்லப்பட்ட பின் எடுக்கப்பட்ட படம் போல சித்தரித்து வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்கள் எதையும் இதுவரை அமெரிக்க அரசோ, ராணுவமோ, அமெரிக்க இணையதளங்களோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...http://rste.org/2011/05/02/775/
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross