ஏப்ரல் 13 அன்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் 2,11,580 தபால் வோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் அரசு வேலை வாக்காளர்கள் 65,274 பேர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், போலீஸ்காரர்கள் ஆகியோர் 1,46,255 பேர், முன்னெச்சரிக்கை கைதிகள் 51 பேர் என மொத்தம் 2,11,580 பேர் ஆகும். ௦
திருச்செந்தூர் தொகுதியில் மொத்தம் 1023 பேருக்கு தபால் வாக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் அரசு வேலை வாக்காளர்கள் 31 பேர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், போலீஸ்காரர்கள் ஆகியோர் 990 பேர், முன்னெச்சரிக்கை கைதிகள் 2 பேர்.
வாக்கு எண்ணிக்கை நாளான மே 13 அன்று முதலில் தபால் வோட்டுகளே எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. |