காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் கீழ் மத்ரஸத்துல் அஸ்ஹர் லி தஹ்ஃபீழில் குர்ஆனில் கரீம் என்ற பெயரிலான திருக்குர்ஆன் மனனப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
இப்பிரிவின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டும், திருக்குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்துள்ள மாணவர் ஒருவருக்கு “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டம் (ஸனது) வழங்குவதற்காகவும், இம்மாதம் 11ஆம் தேதி பள்ளி வளாகத்தில நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில், மாணவர்களின் உரைகள், திருக்குர்ஆன் மனனப் போட்டிகள், திருக்குர்ஆனை இனிமையாக ஓதும் கிராஅத் போட்டி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
விழா ஏற்பாடுகளை மத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இம்ரான் உமரீ, ஹாஃபிழ் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். |