காயல்பட்டினம் நகரை புகையிலை பயன்பாடற்ற நகராட்சிப் பகுதியாக மாற்றுவது என்ற குறிக்கோளுடன் இம்மாதம் 08ஆம் தேதியன்று காலை 09.30 மணி முதல் காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் விழிப்புணர்வு முகாம், காயல்பட்டினம் வெல்ஃபர் ட்ரஸ்ட் மற்றும் ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில் நடத்தப்படவுள்ளது.
காயல்பட்டினம் வெல்ஃபர் ட்ரஸ்ட் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் முகாம் துவக்க நிகழ்ச்சிக்குத் தலைமையேற்கிறார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
இம்முகாமில் வாய் புற்றுநோய் தடுப்பு, பல் - வாய் தொடர்பான பிரச்சினைகளுக்கு, நெல்லை ட்ரூ ட்ரஸ்ட் மற்றும் சார்லி பல் மருத்துவமனையிலிருந்து பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் இலவசமாக மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை தரவுள்ளதாகவும், விழாவில் குறும்பட உதவியுடன் மேற்படி நோய்கள் குறித்த விளக்கம் தரப்படவுள்ளதாகவும் முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் முகாமில் கலந்து பயனடையுமாறும் அவர்கள் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ,
காயல்பட்டினம்
மற்றும்
பாட்சி ஷமீம்,
ஜித்தா. |