காயல்பட்டினத்தில் நகர்நலப் பணிகளுக்காக காயல்பட்டினம் வெல்ஃபர் ட்ரஸ்ட் என்ற பெயரில் புதியதோர் அமைப்பு துவக்கப்பட்டு, 73/2011 என்ற எண் படி அரசுப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை இயன்றளவு செய்திடவும், நகர மாணவர் கல்வி மேம்பாட்டிற்கும், அவர்களின் வேலைவாய்ப்பிற்கும் அக்கறையுடன் செயலாற்றிடவும், நகரில் சுகாதாரமான சுற்றுச்சூழல் உருவாக்கப்படவும், கையூட்டு உள்ளிட்ட சமூகத் தீமைகளுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், நகரின் ஒழுக்கம், இறையாண்மை, பண்பாடு, பாதுகாப்பு, சுயமரியாதை போன்றவற்றை சட்டத்திற்குட்பட்டு கண்காணித்திடவும் இவ்வமைப்பு துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வமைப்பிற்கு புதிய நிர்வாகக் குழு பின்வருமாறு தேர்வு செய்யப்பட்டுள்ளது:-
எஸ்.ஐ.அபூபக்கர் - தலைவர்
எம்.ஏ.இஜ்ஜத்தீன் - துணைத்தலைவர்
முஹம்மத் ஆதம் சுல்தான் - பொதுச் செயலாளர்
எம்.எம்.முஜாஹித் அலீ - இணைச்செயலாளர்
எம்.என்.அஹ்மத் ஸாஹிப் - இணைச்செயலாளர்
எம்.எஸ்.செய்யித் முஹம்மத் - பொருளாளர்
எஸ்.ஐ.செய்யித் மொகுதூம் - துணைப் பொருளாளர்
ஏ.எஸ்.எச்.நூர் முஹம்மத் ஃபிர்தவ்ஸ் - செய்தித் தொடர்பாளர்.
இவ்வமைப்பின் துவக்கக் கூட்டம் 17.04.2011 அன்றும், முதலாவது பொதுக்குழுக் கூட்டம் 21.04.2011 அன்றும் காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரிலுள்ள அன்னை கதீஜா மத்ரஸாவில் நடைபெற்றுள்ளது.
பொதுக்குழுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன:-
தீர்மானம் 01 - காயலரின் கல்வி:
நமதூர் மாணவர்கள் பயனுள்ள தரமான கல்வி பெற்றிட இவ்வமைப்புதொடர்ந்து பாடுபடும். கல்வி உதவிகள், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள்நடத்தப்படும். மாணவ மாணவியருக்கு உலக்கல்வியோடு கூடியஇஸ்லாமிய கல்வியும், மார்க்கக் கல்வியோடு உலகக்கல்வியைவழங்கிடவும் முயற்சி மேற்கொள்ளப்படும். இம்முயற்சியைநிலைநாட்ட பாடுபடும் பிற அமைப்புகளுக்கு தகுந்தவழிகாட்டுதல்களும், ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்.
தீர்மானம் 02 - காயல்பட்டினம் கலாச்சாரம்:
நமதூர் முன்னோர்கள் கட்டிக்காத்த கலாச்சார முறை பாதுகாக்கமுயற்சி மேற்கொள்ளப்படும். நகரில் பெருகிவிட்ட விபச்சாரம், வட்டி,வரதட்சணை, மது, சூது போன்ற சமூகத்தீமைகளுக்கு எதிராகபோர்க்குரல் எழுப்பப்படும். நம் இந்திய நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டுமேற்கண்ட தீமைகள் நம் நகரில் தொடரா வண்ணம் அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தீர்மானம் 03 - நோய் தடுப்பு மற்றும் மருத்துவ உதவிகள்:
நமதூர் மக்களை பாதிக்கும் கொடிய நோய்களான புற்றுநோய்,இதயக்கோளாறு, மூளை வளர்ச்சியின்மை, ஆஸ்துமா, நரம்புதளர்ச்சி போன்ற கொடிய நோய்களுக்கான அறிகுறிகளையும்,காரணங்களையும் முற்கூட்டியே கண்டறிந்து சம்பந்தப்பட்ட அரசுதுறைகளுக்கு அறிக்கை அளித்து அவைகளை தடுப்பதற்கு முயற்சிமேற்கொள்ளப்படும்.
நோய்களை குணப்படுத்துவதற்கான மருத்துவ உதவிகள், மருத்துவஆலோசனைகள், மருந்துகள், மருத்துவக் கருவிகள் என்றுஅனைத்தும் முடிந்தவரை இலவசமாக வழங்கப்படும். நகரிலுள்ளமருத்துவமனைகளை அணுகி மேற்படி கொடிய நோய்களைதீர்ப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் முடிந்த அளவுவழங்கப்படும்.
தீர்மானம் 04 - சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு:
காயல்பட்டினம் நகரின் சுத்தம் சுகாதாரத்திற்கு பெரும் சவாலாகஇருக்கும் தொழிற்சாலை கழிவுகள், நச்சுப் புகை, சாக்கடை கழிவுகள்,முறைபடுத்தாத குப்பை கூளங்கள், அசுத்தமான குடிநீர்முதலியனவற்றின் தீங்கை விட்டும் மக்களை பாதுகாக்கும்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நகரின் நிலத்தடிநீரை சேமித்தல், நகரைச் சுற்றி மரம் நட்டுதல்போன்ற இயற்கை பாதுகாப்பு விஷயங்களிலும் கவனம் எடுக்கப்படும்.
தீர்மானம் 05 - வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை:
நகரின் படித்த இளைஞர்களுக்;கு தகுந்த வேலைகள் பெற்றிடஇவ்வமைப்பு வழிகாட்டும். பட்டம் பெற்ற காயல் வாசிகள் அந்நியநாட்டு மண்ணில் அல்லல்படும் அவலத்தை குறைக்கும் வகையில்அவர்களுக்கு அரசு வேலைகள் கிடைக்க இவ்வமைப்பு பாடுபடும்.
நகரில் சிறுதொழில்கள் பெருக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.காய்கறி வியாபாரம், கட்டிடத்துறை, மரவேலைகள் செய்தல் போன்றதொழில் துறைகளில் காயல்பட்டின மக்களின் பிரதிநிதித்துவத்தைபெருமளவில் உயர்த்தப்படும்.
தீர்மானம் 06 - கலப்படம்:
நகரில் விற்பனையாகும் அனைத்து உணவுப்பொருட்கள், மற்றும்உணவு பதார்த்தங்களின் கலப்பட நிலை பற்றி ஆராயப்படும்.இதுவிஷயமாக சம்பந்தப்பட்ட அரசு துறைகளை தொடர்பு கொண்டுகலப்பட வியாபாரிகள் மீது தகுந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும்.
தீர்மானம் 07 - போலி விலைவாசியை கட்டுபடுத்துதல்:
விற்பனை பொருட்களுக்கு அரசு மற்றும் வியாபார சங்கங்கள்நிர்னயித்துள்ள தொகையைவிட நம் நகருக்கென்றே பிரத்யேகமாகவிலையைக் கூட்டி விற்கப்படும் சம்பந்தப்பட்ட பொருட்களைகண்டறிந்து, அவைகளின் விலையை கட்டுக்குள் கொண்டுவரும்நடவடிக்கைகள் எடுக்கப்படும். இப்போலி விலையேற்றத்தின் மூலம்காயல்பட்டின மக்களின் செல்வத்தை சுரண்டும் இதுபோன்றகொடுமைகளை தடுப்பதற்கு சட்டத்திற்கு உட்பட்டு அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தீர்மானம் 08 - அரசியல் மற்றும் ஆன்மீகம்:
அரசியலிலும் ஆன்மீகத்திலும் காயல்பட்டினம் மக்கள் சிறந்துவிளங்க நமது அமைப்பு தொடர்ந்து வழிகாட்டும், அதற்காக பாடுபடும்.அரசியலிலும் ஆன்மீகத்திலும் நமது அமைப்பு அவசியம் ஏற்பட்டால்நேரடியாகவும் ஈடுபடும்.
தீர்மானம் 09 - நகரின் தனித்துவம் மற்றும் ஒற்றுமை பேணல்:
நகரின் பாதுகாப்பு, கலாச்சாரம், பண்பாடு, தொழில்முறைபோன்றவற்றில் காயல்பட்டினத்திற்கென்றே உள்ள தனித்துவம்தொடர்ந்து கட்டிக்காக்கப்படும். மதம் இனம் ஜாதி பிரிவுகளுக்குஅப்பார்ப்பட்டு காயல்பட்டின குடிமக்களின் ஒற்றுமைக்காகஇவ்வமைப்பு தொடர்ந்து பாடுபடும்.
தீர்மானம் 10 - செய்தி ஊடகம்:
வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் காயல்வாசிகளுக்குஅமைப்பின் செயல்பாடுகளை தெரிவிக்கவும், மேற்காணும் நல்லவிஷயங்களை பிரச்சாரமாக எடுத்துச் செல்லவும் நமதுஅமைப்பிற்கென்றே தனி இணையதளம் உட்பட செய்தி ஊடகங்கள்அமைப்பதில் கவனம் செலுத்தப்படும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |