பிரபல இஸ்லாமிய பேச்சாளர் டாக்டர் ஜாகிர் நாயக் தலைமையில் இயங்கும் Islamic Research Foundation - IRF அமைப்பு மூலமாக முஸ்லிம் மாணவர்களுக்கான உதவி தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல், மகாராஷ்டிரா மாநில முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இவ்வுதவி தொகைகள், இவ்வாண்டு முதல் இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 1.5 கோடி ரூபாய் வரை உதவி தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.
உதவி தொகை பெற தேர்வு செய்யப்படும் மாணவருக்கு - மருத்துவம், பொறியியல், கல்வித்துறை, நிர்வாகத்துறை (Management) படிப்புகளுக்கு - 100 சதவீத உதவி வழங்கப்படும். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆங்கிலம் மற்றும் உருது மொழி வழியில் பயிலும் மாணவர்களுக்கும், பிற மாநிலங்களில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் இவ்வுதவி தொகை வழங்கப்படும்.
உதவி தொகை பெறுவதற்கான நுழைவு தேர்வு கீழ்க்காணும் நகரங்களில் மே மாதம் 29 ஞாயிறு அன்று நடைபெறும்: மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டில்லி, கொல்கத்தா, ஹைதராபாத், ஔரங்காபாத், அகோலா மற்றும் மலேகாவ்ன்.
நுழைவு தேர்வில் கேள்விகள் 75 சதவீதத்திற்கும் கூடுதலாக குர்ஆன் அடிப்படையில் இருக்கும். நுழைவு தேர்வின் முடிவுகள் அடிப்படையில் நேர்க்காணல் நடைபெறும். நேர்காணலில் தேர்வு செய்யப்படும் மாணவருக்கு 100 சதவீத உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும் அல்லது IRF இணையதளத்தை அணுகவும் .
தகவல்:
டாக்டர் கிஸார் (சென்னை)
ஷகீல் அஹ்மத் (பெங்களூரு)
மற்றும்
ஹஸன் (தம்மாம்)
|