பள்ளிக்கூடங்களில் கோடை விடுமுறையை முன்னிட்டு, அந்த விடுமுறைகளை பயனுள்ள வகையில் கழித்திடும் பொருட்டு காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) சார்பாக ஆண்டுதோறும் மே மாதங்களில் கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் பயிற்சி வகுப்புகள் இம்மாதம் 02ஆம் தேதி காயல்பட்டினம் குட்டியாபள்ளியில் துவங்கியது. எம்.என்.அஹ்மத் ஸாஹிப் பயிற்சியைத் துவக்கி வைத்தார். திருமறை குர்ஆன் மனனம், நபிமொழித் தொகுப்புகள் பயிற்றுவிப்பு, நற்குணங்கள் - நல்லொழுக்கப் பயிற்சி, இஸ்லாமிய மார்க்க வரலாறு, இஸ்லாமிய கொள்கை விளக்கம் உட்பட ஏராளமான தலைப்புகளின் கீழ் ஆசிரியர்கள் பயிற்சியளித்து வருகின்றனர்.
காயல்பட்டினத்தைச் சார்ந்த ஏராளமான பள்ளி மாணவர்கள் இவ்வகுப்புகளில் பயின்று வருகின்றனர். இம்மாதம் 22ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் முடிவில் சிறந்த மாணவர்களுக்கு பரிகள் வழங்கப்படவுள்ளன. இம்முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
முகாம் ஏற்பாடுகளை தஃவா சென்டர் மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா ஒருங்கிணைப்பில், அதன் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
தகவல்:
ஆரிஷ் கான்,
செய்தித் தொடர்பாளர்,
சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்),
காயல்பட்டினம்.
Moderator:செய்தியில் சில வாசகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. |