ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலையில் வெளியிடப்பட உள்ளன. இதற்கான அனைத்துப் பணிகளும் சனிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தன. பள்ளிகளுக்கான மதிப்பெண் பட்டியல், சி.டி.க்கள் ஞாயிற்றுக்கிழமை காலை அனுப்பி வைக்கப்படும்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் இணையதளம் மூலமாகவும் தங்களது மதிப்பெண்ணை தெரிந்துகொள்ளலாம்.
மார்ச் 02 முதல் 25ஆம் தேதி வரை ப்ளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனித்தேர்வர்களாகவும் எழுதினர்.
ப்ளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் 19ஆம் தேதி நிறைவடைந்தது. அதன்பிறகு டேட்டா சென்டர்கள் மூலம் மதிப்பெண்ணை பதிவு செய்யும் பணியும், பிழைகளைத் திருத்தும் பணியும் நடைபெற்று வந்தது.
ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்தப் பணிகள் இப்போது முடிவடைந்து, தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (நாளை) வெளியிடப்பட உள்ளன.
நன்றி:
தினமணி (08.05.2011) |