காயல்பட்டினம் வடமுனையில் அமைந்துள்ள தாரங்கதாரா கெமிக்கல் வர்க்ஸ் (டி.சி.டபிள்யு.) நிறுவனத்திலிருந்து பொருளேற்றிச் சென்ற வாகனம் நேற்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட Lye என்ற பொருளை ஏற்றுமதி செய்வதற்காக, திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலை வழியே TN 69-AC 6245 என்ற எண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஏற்றிச் சென்றபோது, வரண்டியவேல் என்ற ஊரிலுள்ள சாலை திருப்பத்தில் நேற்று நண்பகலில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது வாகனத்திலிருந்த பரமசிவன், கார்த்திக் என்ற இருவருக்கும் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக அருகிலுள்ள ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, நெல்லையிலுள்ள கண் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாகனம் விபத்துக்குள்ளான சில நிமிடங்களில் அது தீப்பற்றி எரிந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு நண்பகல் 12.00 மணியளவில் நாம் சென்றபோது, வாகனம் சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்து விழுந்ததன் காரணமாக, அதில் ஏற்றிச் செல்லப்பட்ட திரவப்பொருள் சாலை முழுக்க சிந்திய அடையாளம் வெண்ணிற படலத்துடன் காட்சியளித்தது. அவ்விடத்தில் மனித சுவாசத்திற்கு இடையூறு செய்யும் விதத்தில் ஒருவித குழப்பமான வாசனை வீசியது. விபத்துக்குள்ளான வாகனம் முற்றிலும் சிதலமடைந்து உருக்குலைந்து காணப்பட்டது. வாகனத்தின் மேற்பகுதியிலிருந்த மரங்களின் இலைகள் கருகிய நிலையில் காணப்பட்டது.
டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து வந்த தீயணைப்பு வாகனம் மூலம் எரிந்துகொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான வாகனத்தில் எஞ்சியிருந்த வேதிப்பொருள் மற்றொரு கண்டெய்னர் லாரியில் குழாய் எடுத்துச் செல்லப்பட்டது.
களத்தொகுப்பில் உதவி:
K.M.T.சுலைமான்,
M.A.K.ஜைனுல் ஆபிதீன்
மற்றும்
அய்யூப்
(காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்) |