சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் சென்னை மாவட்ட முன்னாள் தலைவருமான ஹாஜி ஏ.கே. அப்துல் ஹலீமின் மனைவி எஸ்.ஹெச். ஹைருன்னிசா இன்று (மே 8) நள்ளிரவு 12:30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78.
அவரது ஜனாஸா தொழுகை சென்னை அங்கப்பன் தெருவில் உள்ள மஸ்ஜிதே மாமூரில் இன்று அஸர் தொழுகைக்குபின் நடத்தப்பட்டு, தொடர்ந்து சென்னை ராயபேட்டையில் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
1. salam posted bysithi katheeja (kayal patnam)[08 May 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 4265
ஹாஜி அவர்களின் மனைவியாரின் மரணச் செய்தி கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தோம். அல்லாஹ் மர்ஹூம்களின் பிழைகளைப் பொருத்து, மேலான சுவன பதியை கொடுப்பானாக. அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் கும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
2. மங்பிறததும்,துஆவும் posted byT.M.Rahmathullah(72) (Kayalpatnam 280852)[08 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4270
இன்னா லில்லாஹி வ் இன்னா இலைஹி ராஜிஊன் !
அஸ்ஸலாமுஅலைக்கும் ,நல்ல ஒரு பரோப்காரரும்,நமதூர் அரூசுல்ஜன்னாஹ் பெண்கள் மத்ரசதுன் நிஸ்வானின்,ஆரம்பகால ஆலோசகரும்.உபகாரியுமான ஹாஜியார் அவர்களின் மனிவியார் மரண செய்தி அறிந்து கவலை அடைந்தோம்.எல்லாம் வல்ல அல்லாஹ் மவ்த்தா அவர்களின் பிழைகளை மன்னித்து "பிர்தவ்சுல் ஆலா " மேலான சுவன பதவியை தந்தருள்வானாக !
இன்னும் ஹாஜியார் அவர்களின் குடும்பத்தார்,மகனார் ஆலிம் செயத் முஹம்மத் ஆகியவர்களுக்கு "ச்ப்ரன் ஜமீலா "எனும் பொறுமையை தந்தருள் வானாக .ஆமீன் ! ! T.M.Rahmathullah,மற்றும் மதரசா நிர்வாகிகள் மாணவிகள் ,/kpm.
எங்கள் அன்பு தந்தையார் மர்ஹூம் K.V. அஹ்மத் தாஹிர் அவர்களின் மூத்த சகோதரராய் வாழ்வில் வழி காட்டி, இன்றும் எங்கள் மீது அன்பும் பாசமும் காட்டி வரும் கண்ணியத்துக்குரிய பெரியப்பா ஹலீம் ஹாஜியார் அவாகளின் அன்பு துணைவியார் வபாத்து செய்தி எங்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
மர்ஹூமா அவர்களை பிரிந்து இருக்கும் குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்பதே தெரியவில்லை... வல்ல ரஹ்மான்... மர்ஹூமா அவர்களது குடும்பத்தார் இதயங்களில் சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை கொண்டு நிரப்பி, மர்ஹூமா அவர்களின் நல்ல அமல்களை மிகவும் இரக்கத்தோடு அங்கீகரித்து, மறுமை நாளில் ஜன்னத்துல் பிர்தவ்சுல் அஃலா (JANNATHUL FIRDAWSUL AA"LA ) வெனும் உயரிய சுவனபதி நல்கிட இரு கரம் ஏந்தி இறைஞ்சுகிறோம். ஆமீன்!! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மதுல்லாஹ் )
K.V. அஹ்மத் தாஹிர் குடும்பத்தினர்
காயல்பட்டினம் மற்றும் கத்தார்.
6. CONDOLENCE posted byshaik abbul cader (kayalpatnam)[09 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4317
அஸ்ஸாமு அலைகும் வ ரஹ்மததுள்ளாஹி வ பரகாதுஹு. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மறைந்த மனை வியின் இழப்பால் தவிக்கும் ஹாஜியார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபன்களைதெரிவிதுக்கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிளைகளை பொறுத்து மேலான ஜன்னதுல் ஃபிர்தவுசில் குடியிருத்தாட்டுவானாக. ஆமீன் வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross