நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் வழிநடத்தியும், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நடப்பாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று, இறையருளால் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவரும், எமது சிங்கை காயல் நல மன்றத்தின் உறுப்பினர் அஸ்ஹர் அவர்களின் உடன்பிறந்த சகோதரருமான ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு எங்கள் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ரஷீத் ஜமான், செயலர் மொகுதூம் முஹம்மத் மற்றும் செயறகுழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவர் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கிறோம்.
இதற்காக உழைத்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்தினர், தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும், என்றும உறுதுணையாயிருந்த பெற்றோருக்கும் எங்கள் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு சிங்கை காயல் நல மன்றத்தின் வழிநடத்தி ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |