ஜித்தா - சவுதி அரேபியா:
பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு ஜித்தா காயல் நல மன்றம் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள நமது எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கும் மற்றும் நமதூரில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஜித்தா காயல் நல மன்றத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டு மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் நமதூரின் மொத்த தேர்ச்சி சதவிகிதம் இக்கல்வியாண்டில் 94.55 என்று பதிவாகியுள்ளது. இன்ஷாஅல்லாஹ் வரும் கல்வியாண்டில் 100% வெற்றியை நமதூர் மாணவ சமுதாயம் பெற்றிட வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இந்த வெற்றிக்காக உழைத்த நகரின் அனைத்துப்பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள் மற்றும் நமதூர் மாணவ சமுதாய முன்னேற்றத்திற்கு முயற்சி எடுத்து வரும் காயல் ஃபஸ்ட் டிரஸ்ட் மற்றும் இக்ராஃ கல்வி சங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
பொறியாளர் எஸ். பஷீர்,
ஆலோசகர், காயல் நல மன்றம், ஜித்தா.
|