நடைபெற்று முடிந்துள்ள 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட, நகரளவில் சாதனை புரிந்த மாணவ-மாணவியருக்கு சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறை கிருபையால் இவ்வாண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு அரசுப்பொது தேர்வுகளில் மாவட்ட அளவிலும், நகர அளவிலும் சாதனைகள் புரிந்துள்ள மாணவ-மாணவியரை எங்கள் ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பாக மனமார பாராட்டுகிறோம்.
தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள நமது எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கும்,
நமதூரில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பாக மனமார்ந்த பாராட்டு மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் நகர அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள எல்.கே. மேல்நிலை பள்ளி மாணவர் எஸ்.டீ.முஹம்மது அப்ராஸ்,
மூன்றாம் இடம் பெற்றுள்ள சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி சொளுக்கு எம்.ஏ.சி.உம்மு சரீஹா ஆகியோரை எம்மன்றம் பாராட்டுகிறது.
அத்துடன், உளவியல் பாடத்தில் 200க்கு 184 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி ஆர்.முத்துமாரியையும் எம்மன்றம் பாராட்டுகிறது.
இந்த வெற்றிக்காக உழைத்த நகரின் அனைத்துப்பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள் மற்றும் நமதூர் மாணவ சமுதாய முன்னேற்றத்திற்கு முயற்சி எடுத்து வரும் இக்ராஃ கல்வி சங்கம் மற்றும் தி காயல் ஃபஸ்ட் டிரஸ்ட் அமைப்புகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி S.M.முஹம்மத் லெப்பை,
துணைச் செயலாளர்,
காயல் நற்பணி மன்றம்,
ரியாத், சஊதி அரபிய்யா. |