Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:15:47 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6148
#KOTW6148
Increase Font Size Decrease Font Size
புதன், மே 11, 2011
முதலுதவி குறித்து நகரில் செய்முறை பயிற்சியுடன் விழிப்புணர்வு! அண்மையில் நடத்திட ஐக்கிய ராஜ்ஜிய பொதுக்குழு முடிவு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3020 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பல்வேறு சம்பவங்களின்போது முதலுதவிகளை மேற்கொள்வதெப்படி என்பது குறித்து, அது தொடர்பான நிபுணர்களைக் கொண்டு செய்முறைப் பயிற்சியுடன் காயல்பட்டினத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த ஏப்.30இல் நடைபெற்ற ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்ற பொதுக்குழு முடிவு செய்துள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எமது ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியன்று சிறப்புற நடந்து முடிந்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப்புகழும் இறைவனுக்கே!

கூட்ட நிகழ்வுகள்:

கூட்டத்திற்கு எம் மன்றத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். ஜே.ஏ.அப்துல் ஹலீம் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் அப்துல் மத்தீன் லபீப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

பின்னர், மன்றத் தலைவரும், கூட்டத் தலைவருமான டாக்டர் செய்யித் அஹ்மத், மன்ற துணைத்தலைவர் ஜனாப் லண்டன் அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர். மன்றம் துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான மன்றத்தின் செயல்பாடுகள், இனி வருங்காலங்களில் மன்றம் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து அவர்கள் தமதுரையில் விளக்கிப் பேசியதோடு, ஓய்வற்ற பணிச்சுமைகளுக்கிடையிலும், ஒன்றுகூடுவதற்காகக் கிடைத்த இந்த வாய்ப்பை நழுவ விடாமல் வந்து சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.



பின்னர் மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் ஸதக்கத்துல்லாஹ் சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.

கலந்துரையாடல்:

பின்னர் திறந்தவெளி கலந்துரையாடல் நடைபெற்றது. ஷாஹுல் ஹமீத் ஜிஃப்ரீ கலந்துரையாடலை ஒருங்கிணைத்தார். மறுபுறம் டேபிள் டென்னிஸ் விளையாட்டு உற்சாகத்துடன் நடைபெற்றது.





பிறகு, மதிய உணவு விருந்தோம்பல் நடைபெற்றது. சுவையோடு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த மதிய உணவை உறுப்பினர்கள் ஆர்வத்துடன் உட்கொண்டனர்.

நகர மரபுச்சொல் வினாடி-வினா போட்டி:

உணவு இடைவேளைக்குப் பின், வினாடி-வினா போட்டி நடைபெற்றது. மன்றத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி நாம் தாயகம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல்வழக்கை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட போட்டி, உறுப்பினர்களிடையே மிகுந்த மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்து, சில மணி நேரங்கள் ஊரிலேயே இருந்த அனுபவத்தைப் பெற்றுத் தந்தது.



தமிழ் மொழித் தொடர்பு முற்றிலும் அற்றுப்போன ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் இதுபோன்ற போட்டிகள் அடிக்கடி நடத்தப்பட்டால், வளரும் தலைமுறைக்கு தாய்மொழியுடன் தொடர்பிருந்துகொண்டே இருக்கும் என்பது அங்கு அனைவராலும் உணரப்பட்டது. போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இலவச பள்ளிச் சீருடை / பாடக்குறிப்பேடு ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தின் கீழ் இக்ராஃ தலைமையில் பொதுநல அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், பள்ளிக்கூடங்களில் பயிலும் ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவித்தொகை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து விஷயங்களில் உதவ விரும்பும் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் பங்களிப்பைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இறுதியாக பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 01 - அமைப்பு சட்ட விதிகள் உருவாக்கம்:
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் அமைப்பிற்கு அமைப்பு சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அது கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

தீர்மானம் 02 - வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றப் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்ட மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை கூட்டம் ஒருமனதாக அங்கீகரித்தது.

தீர்மானம் 03 - முதலுதவி குறித்த விழிப்புணர்வு:
காயல்பட்டினம் நகரில் பொதுமக்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை விரைவில் நடத்துவதென்றும், அதில் முதலுதவி குறித்து அது தொடர்பான நிபுணர் குழுவைக் கொண்டு செய்முறை பயிற்சிகளுடன் பொதுமக்களுக்கு விளக்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. பயிற்சி முகாம் நடைபெறும் இடம், காலம் குறித்து விரைவில் அறியத்தரப்படும்.

இது விஷயத்தில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நீரிழவு நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் அபூபக்கர் அவர்களை மன்றம் மனதாரப் பாராட்டி, அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 04 - மன்றம் அரசுப்பதிவு:
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் (KWAUK) முறைப்படி அரசுப்பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து, இது அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பாக செயல்படும்.

தீர்மானம் 05 - உண்டியல் நிதி சேகரிப்பு:
நகர்நலப் பணிகளை அதிகளவில் செய்திடும் பொருட்டு மன்றத்திற்கு கூடுதல் நிதியாதாரத்தை உருவாக்கும் நோக்கில், மன்ற உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு உண்டியல் வழங்குவதெனவும், ஒவ்வோர் ஆண்டின் இரண்டாம் கால் பகுதியிலும் உண்டியல் திறக்கப்பட்டு, நிதியாதாரம் மன்றக் கணக்கில் சேர்க்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 06 - புற்றுநோய் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளும் மன்றங்களுக்கு பாராட்டு:
புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை தொடராக நடத்தி வரும் கத்தர் காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள்,

புற்றுநோய் குறித்த தகவல் சேகரிப்பை வெற்றிகரமாகச் செய்துகொண்டிருக்கும் ரியாத், தம்மாம், ஜித்தா காயல் நற்பணி மன்றங்கள்,

“புற்றுக்கு வைப்போம் முற்று” குறுந்தகடு தயாரித்து காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்களித்த ஜித்தா காயல் நற்பணி மன்றம்,

நகரில் புற்றுநோய் பரவல் குறித்த காரணிகளை ஆய்வு செய்து வரும் Cancer Fact Finding Committee - CFFC குழுமம்,

காயல்பட்டினம் உடல்நலன் ஆய்வு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்திவரும் வடஅமெரிக்க காயல் நல மன்றம், தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுக்கு எம் மன்றம் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் நகர்நலப் பணிகள் சிறப்புற வாழ்த்துகிறது.

தீர்மானம் 07 - மாணவர்களுக்கு வாழ்த்து:
நடைபெற்று முடிந்துள்ள 10ஆம், 12ஆம் வகுப்பு அரப் பொதுத் தேர்வுகளில் நமதூர் மாணவ-மாணவியர் நன்மதிப்பெண்கள் பெற்று, மாநில, மாவட்ட அளவில் சாதனைகள் புரிய எம் மன்றம் வாழ்த்துகிறது.

தீர்மானம் 08 - ஐக்கியப் பேரவைக்கு வேண்டுகோள்:
நகர்நலன் கருதி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையை அனைத்து ஜமாஅத்துகளின் நேரடி நிர்வாக மற்றும் பிரதிநிதித்துவ சபையாக மாற்ற வேண்டுமெனவும், சமூக நலனில் அக்கறை கொண்டவர்களை அனைத்து ஜமாஅத்துகளிலிருந்தும் - வார்டுகளிலிருந்தும் தேர்ந்தெடுத்து, பேரவையை வலுப்பெறச் செய்ய வேண்டுமெனவும் பேரவை நிர்வாகத்திற்கு எம் மன்றம் கோரிக்கை வைக்கிறது.

தீர்மானம் 09 - சிங்கை கா.ந.மன்ற புதிய நிர்வாகக் குழுவுக்கு வாழ்த்து:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கு அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகக் குழுவினருக்கு எம் மன்றம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அவர்களின் சீரிய செயல்பாட்டின் கீழ் அம்மன்றம் நகர்நலப் பணிகளில் சிறந்தோங்க வாழ்த்துகிறது.

தீர்மானம் 10 - திருவனந்தபுரம் முத்துச்சாவடி அமைய ஒத்துழைப்பு:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காயலர்கள் தங்குவதற்காக முத்துச்சாவடி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தைப் பாராட்டுவதோடு, அவர்களின் இந்த நல்ல முயற்சியில் எம் மன்றமும் இயன்றளவு தோள் கொடுக்கும் என தெரிவிக்கிறது.

தீர்மானம் 11 - அடுத்த கூட்டம்:
மன்றத்தின் அடுத்த கூட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதியன்று நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. நிகழ்விடம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.

தீர்மானம் 12 - CFFC அறிக்கை சமர்ப்பணம்:
நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறியும் CFFC குழுமத்தின் அறிக்கை மன்றத்தால் பெறப்பட்டது. மன்றத்தின் வேண்டுகோள் கடிதத்துடன் கூடிய ஆய்வறிக்கையை, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் விரைவில் சமர்ப்பிக்க ஆவன செய்வதென தீர்மானிக்கப்படுகிறது.


மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரைக்குப் பின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இதுபோன்ற ஒன்றுகூடல் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்ற உணர்வு மேலிட அனைவரும் கூட்ட நிறைவுக்குப் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.




இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் சார்பாக,
ஹாஃபிழ் அப்துல் மத்தீன் லபீப்,
லண்டன், ஐக்கிய ராஜ்ஜியம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Wish u all the best
posted by Mohamed Salih (Bangalore.) [11 May 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 4380

Dear frineds,

Nice to see the news about your meeting .. and also agenda.. and also see all my friend and relatives matheen, sadakathullah, shahul, mohideen etc.,, i hope u people make a history in your target . may allah full fill alll your needs and wants insha allah..

On behalf of KWA - Bangalore we wish u all sucess in future actions..

Regards,
Mohamed Salih & KWA - Bangalore members..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தாய்மொழியை நேசிப்போம்!
posted by கவிமகன் (துபாய் ) [11 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4383

வளரும் தலைமுறைக்கு தாய்மொழியோடு தொடர்பு இருக்கவேண்டும் என்ற உங்களது உணர்வுக்கு பாராட்டுக்கள்! ஆங்கில தேசத்தில் வாழும் உங்களுக்கு இருக்கும் உணர்வு அன்னை பூமியில் வாழும் அநேகருக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.

பெற்ற தாயை அம்மா என்றும் உம்மா என்றும் அவரவர் மரபுமுறையில் தாய்மொழியில் அழைக்காமல், 'மம்மி' என்று அழைப்பதற்கு பயிற்சி அளிக்கும் பெற்றோர்களே! மம்மி என்றால் என்னவென்று எகிப்தை அறிந்தவர்களை கேட்டுப்பாருங்கள்!

இஸ்லாம் எங்கள் வழி! இன்பத் தமிழ் எங்கள் மொழி!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்த்துகிறோம் ! வழங்குங்கள் உங்கள் சேவையை நம் தாய் மண்ணிற்கு !!
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [12 May 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 4390

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் !

உண்மையிலேயே நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது! கவிமகன் காதர் அவர்கள் சொன்னது போன்று, ஐக்கிய ராஜ்யத்தில் இருந்துக்கொண்டு தாய் மண்ணின் (காயல் பதியின்) தனி தமிழை பெருமைப்பட பேசி மகிழ்ந்த உங்களை பாராட்டாமல் விட்டால் தவறு என்றே சொல்ல வேண்டும்...

கத்தார் நாட்டில் இருந்துகொண்டு இரண்டாவது மொழியாக (SECOND LANGUAGE) வேறு வேறு மொழிகளை படிக்கும் என் புள்ளைங்களுக்கு இன்னும் தமிழை கற்பித்து கொடுக்கவில்லையே என்ற ஏக்கம் இப்போதான்... உங்களை பார்த்து நான் பாடம் படித்துக்கொண்டேன்...

இன்ஷா அல்லாஹ்... என் புள்ளைங்களையும் நம் காயல் மண்ணின் தமிழை பேச வைக்க முயற்சிப்பதோடு, எழுதவும் வாசிக்க்கவும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப் போகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! எங்கு இருந்தாலும்......
இஸ்லாம் எங்கள் வழி முறை!
இன்பத்தமிழ் எங்கள் தாய் மொழி!! என்பதை என்றென்றும் பறை சாற்றுவோம்........

மேலும் நம் ஊர் நலனில் ஆர்வம் கொண்டு பல்வேறு பணிகளில், துறைகளில் தனி தனியாகவும் கூட்டாகவும் செயல்பட்டு கொண்டிருக்கிற பொது நல அமைப்புகளுக்கு வாழ்த்தும் கூறி, உறுதுணையும் வழங்க இருப்பதை தீர்மானம் மூலம் உணர்த்தி உற்சாகம் ஊட்டி இருக்கிற உங்களுக்கு வாழ்த்துக்களும் துஆவும் என்றண்டும் உண்டு!!

முதன்முதலில் நம் நகரில் பல மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கங்களை எங்கள் KVAT BUHARI HAJI CHARITABLE டிரஸ்ட்தான் துவக்கி வைத்து, அனைவர்களுக்கும் ஒரு தூண்டுகோலாய் விளங்கி நிற்கிறது என்பதனை இந்த நேரத்தில் மிகவும் அடக்கத்தோடும் பணிவோடும் இங்கே பதிவு செய்வதில் மகிழ்வு அடைகிறோம்." LIVE TO SERVE".... நன்றிகள் பல ....

அன்புடன் வாழ்த்தும் நெஞ்சம்,
K.V.A.T. HABIB MOHAMED
KVAT BUHARI HAJI CHARITABLE TRUST
KAYALPATNAM and QATAR
www.kvatcharity.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பெஸ்ட் Wishes
posted by Ubaidullah (Macau) [12 May 2011]
IP: 182.*.*.* Macau | Comment Reference Number: 4392

Nice to read the news. Congrats to Shahul Hameed and the team. Its not easy in a place like U.K. to do such things. It needs a lot of efforts and may Allah bless you all for your efforts.

Good to see Dr. Abu Thamby with his strking typical pose. He looks very young and very casual as usual and it brings back a lot of memories of him in olden times. Salam to him and to All.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பொடிசுகள்
posted by shaik abbul cader (kayalpatnam) [13 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4412

லண்டன் புகைப்படகள் பார்த்து மிக்க சந்தோசம். என்ன லண்டனில் உள்ள பொடிசுகள் எல்லாம் பெட்டைகளாகவே தெரிகிறது ஒரு ஆண் கூட இல்லையே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved