ரியாத், சவுதிஅரேபியா - இறைவனின்; பேரருளால் ரியாத், தமிழ் தஃவா ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும்;, ஸுல்தானா தஃவா நிலையத்தின் அனுசரணையுடனும் இம்மாத சன்மார்க்க தஃவா நிகழ்ச்சி; சென்ற 03/06/1432 (06 May 2011) அன்று வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகை முதல் இஷh வரை மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக மௌலவி ஜமால்தீன் (ஷர்கி) அவர்கள் 'நோயாளி கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்" எனும் தலைப்பில் தமது குத்பாப் பிரசங்கத்தை நிகழ்த்தினார். அவர் தமதுரையில் நோயாளி பேணவேண்டிய பொறுமை, சகிப்புத் தன்மை பற்றியும் அதன் மூலம் அவர் பெற்றுக்கொள்ளும் ஆத்மீகப் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
ஜும்ஆத் தொழுகையை அடுத்து மன்னர் ஸுஊத் பல்கலைக்கழக மாணவர் மௌலவி பரூஜ் அவர்கள் 'பொறுமைக்கு வித்திட்ட இஸ்லாம்" எனும் கருப்பொருளில் ஓர் சிற்றுரை நிகழ்த்தினார். அன்று வாட்டியெடுத்த வறுமையிலும் நபித்தோழியர்கள் நோயின்போது காட்டிய பொறுமைக்கு சில சம்பவங்களை முன்வைத்ததோடு தற்கால மாதர்கள் பேண வேண்டிய பொறுமை பற்றியும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து இளைஞர், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற அதேசமயம் பெண்கள் பகுதியிலும் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதனை அடுத்து பகலுணவும், ஓய்வும் வழங்கப்பட்டு மறு நிகழ்ச்சிகள் அஸர்த் தொழுகையின் மறுகனமே ஆரம்பமாகின.
புதியதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்காக நடாத்தப்பட்ட அமர்வில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஆரம்ப நிகழ்வாக 'அல் குர்ஆனை இலகுவழியில் கற்பதற்கான வழிவகைகள் யாவை?" என்ற தலைப்பிலான பாடவகுப்பு மௌலவி அபுல் ஹஸன் (ஸஹ்வி) அவர்களால்; அரங்கேறியது. 'வேறுபட்ட பாசைகள் மூலம் அல்குர்ஆனைப் படிப்பதற்கான அடிப்படைகளை இனங்காட்டுவதே" அவரது வகுப்பின் சுருக்கமாகும்.
சுமார் அரைமணி நேரம் நீடித்த அவரது பாடவகுப்பை அடுத்து கலந்து கொண்டோர் சகலரும் குழுக்கு பதின்மர் என்ற அடிப்படையில் பல குழுக்களாக வகுக்கப்பட்டு 'நோயாளியிடம் நோய் விசாரிக்கச் செல்வதின் சிறப்பும், அவருக்காகப் பிரார்த்திக்கவேண்டிய பிரார்த்தனைகளும் முன்வைக்கப்பட்டதோடு ஒவ்வொருவருக்கும் மனனமிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
மேற்படி `தர்பிய்யா| நிகழ்ச்சி முடிவடைய இங்கு தஃவா நிகழ்ச்சிகளில் பங்கேற்க விNஷட அழைப்பின்பேரில் இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் மௌலவி முர்ஷித் (அப்பாஸி) அன்றைய தின விNஷட உரையை நிகழ்த்தினார். 'அல்லாஹ்வின் அருள்களைப் புரிந்துகொள்வோம்" எனும் தலைப்பில் சிறந்த தொனியில் ஆற்றப்பட்ட அவரது உரை கலந்துகொண்டோருக்கு மிக இனிமையாக இருந்தது என்றால் மிகையாகாது. அன்று இந்த இஸ்லாத்தைக் கட்டியெழுப்புவதற்காகச் செய்யப்பட்ட தியாகங்கள் தான் எத்தனை? பிலால், கப்பாப், அம்மார் (ரலி) போன்றவர்கள் காபிர்களின் சித்திரவதைகளுக்கு உட்பட்டும் இறுதிமூச்சு வரை இஸ்லாத்துக்காகப் போராடிய வரலாற்றுச் சம்பவங்களோடு இணைந்ததாக அவரது உரை அமைந்திருந்தது விNஷட அம்சமாகும்.
மஃறிப் அதான் வரை அவரது உரை நீடித்தது.
மஃறிப் தொழுகையை அடுத்து காய்ச்சல் மற்றும் தலைவலிகளுக்கான காரணிகள் பற்றியும், உடம்பில் ஏற்படும் எவ்வகை நோயாக இருப்பினும் உரிய சமயத்தில் சிகிச்சையளிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் டாக்டர் தாரிக் ஹாசிம் அவர்கள் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சிகளின் இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும், பரிசளிப்பும் நடைபெற்றதோடு அடுத்த மாதத்துக்கான மகளிருக்கான வினாத்தாள்களும் வழங்கப்பட்டு நன்றியுரையுடன் நிறைவுபெற்றன.
நிகழ்சிகள் யாவும் சிறப்பாக நிறைவுபெற வாய்ப்பளித்த வல்லவன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்....
ஜுன் மாத சன்மார்க்க தஃவா நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வரும் பத்தாம் திகதி நடைப்பெறவுள்ளது.
தகவல்:
அபு அஹ்மத் சோனா,
தமிழ் தஃவா ஒன்றியம்,
ரியாத், சவுதிஅரேபியா.
|