70 வயது தாண்டியவர் இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ள சில சலுகைகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தன. 31.03.2011 அன்று 70 வயது பூர்த்தியான புனிதப் பயணி, தம்முடன் ஒரே ஒரு சக பயணியுடன் விண்ணப்பித்தால் ஹஜ் 2011-ல் அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வகையில் உறுதி செய்யப்பட்ட இருக்கைகள், பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள 70 வயதிற்கு மேற்பட்ட ஹஜ் பயணி மற்றும் சக பயணி ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்விதி சற்று தளர்த்தப்பட்டுள்ளது. இப்போது பாஸ்போர்ட் கைவசம் இல்லாவிட்டாலும், பாஸ்போர்ட் விண்ணப்ப எண் குறிப்பிடப்பட்டிருந்தால், குலுக்கலுக்கு போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தேர்வான 70 வயதை தாண்டியவர் ஜூன் 15க்குள் தங்கள் பாஸ்போர்ட் எண்ணை சமர்பிக்கவேண்டும்.
இந்த சலுகை கடந்த மூன்று ஆண்டுகளாக (2008, 2009, 2010) விண்ணப்பித்து ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு பெறாதவருக்கும், கடந்த ஆண்டு (2010) PNR எண் பெற்று, விசா பெறாதவருக்கும் பொருந்தும்.
விண்ணப்பங்கள் ஏப்ரல் 30 வரை பெறப்பட்டன. பாஸ்போர்ட் விதி சலுகை அறிவிப்பினை தொடர்ந்து புது விண்ணப்பங்கள் பெறப்படாது.
தகவல்:
இந்திய ஹஜ் குழு (HAJ COMMITTEE OF INDIA) |