வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவிருக்கும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு வெற்றி பெற கத்தர் காயல் நல மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
வரலாற்றுச் சிறப்புமிக்க நம் காயல் பதியில் வருகின்ற ஜூலை மாதம் 08ஆம் தேதி முதல் 10-ந் தேதி வரை இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு நடைபெறவிருக்கின்ற செய்திகளை அறிந்து எமது மன்றம் பெருமையடைகிறது.
இம்மாநாடு நனிசிறப்புடன் நடைபெறவும், மாநாட்டு பணிகளை செவ்வனே செய்துவரும் அனைத்து நல் உள்ளங்களையும் கத்தர் காயல் நல மன்றம் மனதார வாழ்த்திப் பாராட்டுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கத்தர் காயல் நல மன்றம் சார்பாக,
ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன்
தோஹா, கத்தர். |