சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.
வருகிற கல்வி ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகம் 7.63 கோடி புத்தகங்கள் அச்சிட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 1 முதல் 6-ம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளன.
1-ம் வகுப்புக்கான 4 புத்தகங்கள் அடங்கிய செட் ஒன்றின் விலை ரூ. 200 எனவும், 6-ம் வகுப்புக்கான 5 புத்தகங்கள் அடங்கிய செட்டின் விலை ரூ. 250 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மீதமுள்ள 8 வகுப்புகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. 3, 4, 5, 6 வகுப்புகளுக்கு ஒரே செட் புத்தகத்தின் விலை ரூ. 250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய புத்தகங்கள் இதில் அடங்கும். ஒரு புத்தகத்தின் சில்லறை விலை ரூ. 60 ஆகும்.
7, 8 வகுப்புகளுக்கு ஒரு செட் புத்தகத்தின் விலை ரூ. 300. 5 புத்தங்கள் கொண்ட ஒரு செட்டில் ஒரு புத்தகத்தின் சில்லறை விலை ரூ. 75. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு 5 புத்தகங்கள் அடங்கிய ஒரு செட் விலை ரூ. 350. ஒரு புத்தகத்தின் சில்லறை விலை ரூ. 75.
சமச்சீர் பாடப் புத்தகங்களின் விலை ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு 1.67 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.
இதுவரை 1.05 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு 4.48 கோடி இலவச பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதில் 80 சதவீத புத்தகங்கள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள 65 கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர 23 லட்சம் புத்தகங்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளன. தமிழ், ஆங்கில வழி புத்தகங்கள் 16 லட்சமும், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி புத்தகங்கள் 7 லட்சமும் வினியோகிக்கப்பட உள்ளன. இந்த புத்தகங்கள் அச்சிடும் பணி நடந்து வருகிறது.
தகவல்:
www.chennaionline.com |