2010ஆம் ஆண்டுக்கான சிவில் சர்விசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இந்திய அளவில் முதலிடத்தை தமிழக மாணவி திவ்ய தர்ஷினி பிடித்துள்ளார். 24 வயது நிரம்பிய இவர் சென்னை அடையாரில் உள்ள சட்டக்கல்லூரி பட்டதாரி ஆவார். தனது இரண்டாவது முயற்சியில் தேர்வாகியுள்ள இவர் ஐ.ஏ.எஸ். துறையை தேர்வு செய்துள்ளார்.
கணினி பொறியாளர் சுவேதா முஹன்டி - இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அளவில் மூன்றாம் இடம் சென்னையை சார்ந்த பல் மருத்துவர் டாக்டர் ஆர்.வீ. வருண் குமார் பெற்றுள்ளார். ஆண்களில் முதல் இடம் பெற்றுள்ள இவருக்கு இத்தேர்வில் வெற்றி மூன்றாவது முயற்சியில் கிட்டியுள்ளது. தனது பீ.டி.எஸ். படிப்பை சென்னை ராகாஸ் பல் மருத்துவ கல்லூரியில் அவர் முடித்தார். இவர் ஐ.பி.எஸ். துறையை தேர்வு செய்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சார்ந்த அபிராம் சங்கரன் - நான்காவது இடமும், அரவிந்த் எட்டாவது இடமும் பிடித்துள்ளனர்.
2,69,036 பேர் எழுதிய இத்தேர்வில் நேர்காணலுக்கு 2589 பேர் அழைக்கப்பட்டனர். அதில் 920 பேர் (ஆண்கள் - 717; பெண்கள் - 203) சிவில் சர்வீசின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உட்பட பல்வேறு துறைகளுக்கு தேர்வு செயப்பட்டுள்ளனர். தமிழகத்தை சார்ந்தவர் 98 பேர்.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி முகாம் மூலம் இவ்வருடம் 36 பேர் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம்:
Deccan Chronicle
|