நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு கத்தர் காயல் நல மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் தலைவரும், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்க தலைவருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அல்லாஹ்வின் பேருதவியால் இவ்வாண்டு நடைபெற்று முடிந்துள்ள ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலும், நகர அளவிலும் சாதனைகள் புரிந்துள்ள மாணவ-மாணவியரை எமது கத்தர் காயல் நல மன்றம் பெருமகிழ்வுடன் பாராட்டுகிறது.
நமது மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளியின் மாணவர் A.H.அமானுல்லாஹ்வுக்கும்,
நகரளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள எல்.கே. மேல்நிலை பள்ளி மாணவர் S.D.முஹம்மத் அஃப்ரஸ்,
நகரளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ள சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி சொளுக்கு M.A.C.உம்மு சரீஹா ஆகியோருக்கும் எங்கள் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் உளவியல் பாடத்தில் 200க்கு 184 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி R.முத்துமாரியையும் எம்மன்றம் பாராட்டுகிறது.
இவ்வாண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளதைப் போல் நமது காயல் நகர மாணவ, மாணவியர் இன்ஷாஅல்லாஹ் வரும் காலங்களில் மாநில அளவிலும் முதலிடம் பெற்று நம் காயல் பதிக்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் கத்தர் காயல் நல மன்றம் கேட்டுக்கொள்கிறது.
இந்த வெற்றிக்காக உழைத்த நகரின் அனைத்துப்பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள் மற்றும் இக்ராஃ கல்வி சங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தத் தேர்வில் வெற்றிபெற தவறிய மாணவர்கள் கடும் முயற்சிகள் எடுத்து, வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் தேர்வுகளில் வெற்றிபெற கத்தர் காயல் நல மன்றம் வாழ்த்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கத்தர் காயல் நல மன்றம் சார்பாக,
ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன்
தோஹா, கத்தர். |