சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 59ஆவது செயற்குழு மே 06ஆம் தேதி வௌளிக்கிழமை மாலை ஜித்தா-ஷரஃபிய்யாவில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடந்தேறியது.
சகோ.எஸ்.ஐ.அப்துல்பாஸித் இறைமறை வசனங்களோடு கூட்டத்தைத் துவக்க, சகோ.எஸ்.ஜே.நூர்தீன் நெய்னா அனைவரையும் வரவேற்றார்.
உம்ரா கடமைதனை நிறைவேற்ற புனித மக்கா வந்திருந்த, நம் நகர் மருத்துவர் M.S.அஷ்ரஃப் M.D., F.I.C.A., அவர்கள் மன்றத்தின் அழைப்பினை ஏற்று செயற்குழுவுக்கு தலைமைத் தாங்கி சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் பஹ்ரைன் காயல் நல மன்றம் பொருளாளர் வேணா. ஜாகிர் ஹுசைன் கலந்துகொண்டார்.
மன்றசெயல்பாடுகள்:
மன்றத்தின் செயல்பாடுகள் பற்றி சிறியதொரு விளக்கத்தை நிறைவாக தந்தார் செயலர் சகோ.எம்.ஏ.செய்யிது இப்ராஹீம். தற்போதைய செயற்குழு தலைவரைப்பற்றி சகோதரர்களுக்கு அவர் அறிமுகப்படுத்தும்போது ”மருத்துவர் அஷ்ரஃப் அவர்கள் நமதூர் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தாளாளர் என்றும், தமிழ் நாட்டின் API – Chairman,(Association of Physician of India) மற்றும் நம் இந்திய நாட்டின் மிக உயர்ந்த விருதான Dr. B.C. Roy Award, 2006 விருதும் பெற்றுள்ளார் என்றும், திருச்சியில் வசித்து வரும் இவர் சமுதாய பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு பல தொண்டுகளை செய்துவருகிறார் என்றும் அறியத்தந்தார்.
தொடர்ந்து பேசிய செயலர் சகோ. எஸ்.ஏ.கே.சட்னி செய்யத் மீரான்; ”புற்றுக்கு வைப்போம் முற்று” என்ற புற்று நோய் விழிப்புணர்வு குறுந்தகடு குறித்து பாராட்டுக்கள் பல தொலைபேசி மூலம் கிடைக்கப் பெற்றதாகவும், அந்த குறுந்தகடுகளை உலகின் எல்லா காயல் நலமன்றங்களுக்கும் அனுப்பித்தந்துள்ளதாகவும், இதுபோன்று பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த நம் மன்றம் முயற்சிகள் மேற்கொள்ளுமென்றும் கூறினார்.
நடப்போம் சுகம் பெறுவோம்:
இச்செயற்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்க அழைத்தமைக்கு நன்றி கூறி உரையை தொடங்கிய மருத்துவர் அஷ்ரப் அவர்கள், நல்ல பல அழகிய ஆழமான மருத்துவ கருத்துக்களை உவமையோடு மிகத்தெளிவாக எடுத்துக்கூறினார். உடல் நலம் மற்றும் கல்வி (Health & Education) நம் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்றும், குறிப்பாக பெண்கள் கல்வியின் அவசியம், அதனமூலம் அந்த பெண்களால் பேணிகாக்கப்படும் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் இன்றைய பெண்களின் உயரிய வளர்ச்சி குறித்த செய்திகளை அருமையாக பதிவு செய்தார். மேலும்; நம் நாட்டின் முதல் பெண்மணி மற்றும் இதர முக்கிய பெண் தலைவிகள் பற்றியும் தன் மடிக்கணிணியில் பதிவு செய்யப்பட்ட பெண்களின் உயர்பதவி மற்றும் முன்னேற்றச் செய்திகளை பார்வையாக்கி விளக்கினார்.
இன்று நம் சமுதாயம் தொலைக்காட்சி முன் அமர்ந்து துரிதஉணவு (fast food) சாப்பிடும் காலமாக மாறி வருகிறது என்று கவலை கொண்ட அவர், அதை மாற்ற நம்மாலான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வினவினார். அன்று தொலைக்காட்சிப்பெட்டி பெரியதாகவும் அதன் முன் அமர்ந்து பார்க்கும் பெண் மெலிந்தும் காணப்பட்டாள். ஆனால் இன்றோ; தொலைக்காட்சிப்பெட்டி மெலிந்தும் அதன் முன் அமர்ந்து பார்க்கும் பெண் பருமனாகவும் காணப்படுகிறாள் என்ற அழகிய சித்திரத்தையும் மடிக்கணிணியில் கொண்டுவந்தார்.
தொடர்ந்து பேசிய அவர்; "வாழ்க்கை முறை நோய் மற்றும் பொது நோய்" ( 1.Life Style Disease, 2.Common Disease ) என்று நோய்கள் இரண்டு வகை உண்டென்றும் அதை எதிர் கொள்ளும் முறைகளை தெரிந்திருப்பது அவசியம் என்றும் கூறினார்.
முதலாவது Life Style Disease:
நமது ஜீரணமாகா மாறுபட்ட புதிய உணவு பழக்கங்கள், உடற்பயிற்ச்சி இல்லாமை, நல்ல ஊட்டச் சத்தான உணவை தேர்ந்தெடுக்காமை போன்ற நம்முன்னுள்ள குறைகளே மேற்கண்ட முதல் நோய்க்கு காரணமென்றும் கோடிட்ட அவர் அதற்க்கான நிவர்த்திகளையும் சொல்லிச்சென்றார். நல்ல உடற்பயிற்ச்சி, தொடர்நடை மேற்கொள்ளுதலின் அவசியம், 20 வயதிலிருந்து 40 வயதுவரை நடந்து பழகினால், அது 60 வயதுவரை நல்ல பலன் தரும் என்றும் அதன் மூலம் நல்ல உடல் சுகத்தினை பெறலாமென்றும் கூறினார். காய்கறிகள், கீரைகள், பழம் வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகுந்த பயனளிக்கும் என்றும் தெரிவித்தார்.
இரண்டாவது Common Disease:
சக்கரை வியாதி, இருதய சம்பந்த நோய், இரத்த அழுத்தம், இரத்த அணுக்கள் குறைவு இவைகளை நம்முடைய பழக்க வழக்கங்களிலிருந்து மாற்றிக் கொண்டால் மேற்கண்ட பொது நோயிலிருந்து நம்மை பாதுகாக்கலாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும்; பெண்கள் திருமணத்திற்கு முன்பு (Hemoglobin)
இரத்த அணுக்கள் (இரத்த சோகை) குறைபாடு உள்ளதா? என கண்டறிய வேணடியது மிக அவசியம் என்றும் அதனால் பின் ஏற்படும் பல விளைவுகளை முன்பே தடுக்கலாம் என்றும், இதை நம்மில் பலர் அறவே அறிவதில்லை என்ற ஆதங்கத்தை தெரிவித்த அவர்; இதன் குறையை நிவர்த்தி செய்ய பேரிச்சம்பழம், கீரை, மாதுளம்பழம் இவைகளை நாம் உண்டுவருவ்து மிக நல்லது என்றும் இது குறித்த விழிப்புணர்வை நம் மக்கள மத்தியில் கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம் என்றார். இதை இம்மன்றம் முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட அவர் அதில் நானும் இணைந்து பணியாற்ற ஆவல் கொள்கிறேன் என்றும் கூறினார். மேலும் நம்முடைய முன்னால் மாணவர்கள் சேர்ந்து Alumni association அமைப்பு ஏற்படுத்தவேண்டும் அதில் நானும் பங்கெடுத்துக்கொள்வேன், என்ற ஆர்வத்தையும் கூறியதுடன் மன்ற உறுப்பினர்கள் நோய் சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு தெளிவாக பதிலும் தந்து, நம்மன்றம் செய்துவரும் பணிகளையும், வழங்கும் உதவிகளையும் வெகுவாகப் பாராட்டினார் மருத்துவர்.
நிதி நிலை:
நாம் இதுவரை வழங்கிய உதவிகள், கல்விக்காக நடப்பு ஆண்டில் ரூபாய் ஐஆயிரம் வீதம் ஒன்பது மாணவர்களுக்கு இக்ரா மூலமாக நாம் வழங்க இருப்பவை, மன்றத்தின் தற்போதைய இருப்பு, வரவேண்டிய சந்தாக்கள் போன்ற விபரங்களை துணைப்பொருளாளர் சகோ.எம்.எம்.எஸ்.ஷெய்க் அப்துல்காதிர் சமர்ப்பித்தார்.
புகை இல்லா காயல்:
நமது மன்றத்தின் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் புற்று நோய் போன்ற விழிப்புணர்வுச் செய்திகளின் தொடர்வாக வரும் 08ஆம் தேதி ஜலாலியாவில் நடைபெறவிருக்கின்ற வாய் புற்று நோய் தடுப்பு, பல் நோய் விழிப்புணர்வு மற்றும் புகை இல்லா காயல் குறித்த அனைத்து செய்திகளையும் அதன் நோக்கங்களையும் விரிவாக எடுத்துக்கூறினார் மன்றத்தலைவர் சகோ.குளம் அஹ்மது முஹ்யித்தீன்.
மருத்துவத்திற்க்காக:
மருத்துவ உதவிகோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் வாசிக்கப்பட்டு, உபதலைவர் மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாத் அபூபக்கர், மற்றும் மருத்துவர் எம்.எஸ்.அஷ்ரப் முன்னிலையில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட இருதய அறுவைச்சிகிச்சை, கர்ப்பப்பை அறுவைச்சிகிச்சை என உதவினாடி வந்த நபர்களுக்கு உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு அவர்களின் உடல் நலனுக்காக பிராத்திக்கப்பட்டது. அரசு தரும் மருத்துவ உதவிகளையும் இந்த மனுதாரர்கள் பார்வைக்கு கொண்டு செல்லாலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அடுத்தபொதுக்குழு:
அடுத்த 25ஆவது பொதுக்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஜீன் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணியளவில் ஷரஃபிய்யா - இம்பாலா உணவகத்தில் நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது.
மன்றத்தலைவர் சகோதரர் குளம் அஹமது மெய்தீன் அனுசரணையுடன் இரவு சிறப்பான சிற்றுண்டி உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, சகோ.சொளுக்கு எஸ்.எம்.ஐ.செய்யத் முஹம்மது சாகிபு நன்றி நவில, சகோ. எஸ்.எஸ்.ஜாபர் சாதிக் பிராத்தைனையுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
தகவல்:
எஸ்.ஹெச். அப்துல் காதர், மற்றும்
அரபி சுஐப்,
துணை செயலாளர்கள்,
காயல் நல மன்றம், ஜித்தா.
|