கடந்த ஏப்ரல் 13 அன்று நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. திருச்செந்தூர் தொகுதியில் - 21வது சுற்று இறுதியில் 118 வாகுகள் அதிகம் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் மனோகரன் முன்னணி வகித்தார். பின்னர் எண்ணப்பட்ட 738 தபால் ஓட்டுக்களில் 680 ஓட்டுகளை பெற்ற அனிதா - 517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மனோஹரனுக்கு 45 தபால் ஓட்டுக்களே கிடைத்தன.
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (தி.மு.க.) - 68,453
பி.ஆர். மனோகரன் (அ.தி.மு.க.) - 67,936
நா. ராமேசுவரன் (பா.ஜனதா) - 2,428
பா. தேவஞானசிகாமணி (பகுஜன் சமாஜ்) - 626
கொ. சுடலைகண்ணு (இந்திய ஜனநாயக கட்சி) - 533
ந. நட்டார் (ஜார்கண்ட் முக்தி மோர்சா) - 3,239
செ. அரிகோபாலகிருஷ்ணன் (சுயேச்சை) - 104
ஏ. சித்திரைலிங்கம் (சுயேச்சை) - 70
வீ. சிதம்பரம் (சுயேச்சை) - 97
சி. செல்லச்சாமி (சுயேச்சை) - 146
மு. திருப்பதி (சுயேச்சை) - 156
ஆ. நந்தகுமார் (சுயேச்சை) - 125
பி. மணி (சுயேச்சை) - 271
சீ. முத்துமாலை (சுயேச்சை) - 136
ப. முருகேசன் (சுயேச்சை) - 693
பெ. ராஜ் குமார் (சுயேச்சை) - 672
எண்ணப்பட்ட வாக்குகள் - 145,685
|