தமிழக சட்டமன்றத் தேர்தல் கேடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. நேற்று (13.05.2011) வெளியான தேர்தல் முடிவுகளின் படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைக்கவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, தூத்துக்குடி அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் 13.05.2011 அன்று (நேற்று) நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளரும், அ.தி.மு.க. தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன், தனது வெற்றிச் செய்திக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க.வின் மக்கள் விரோத ஆட்சியால் வெறுப்புற்றுப் போயிருந்த தமிழக மக்கள், அவர்களின் பிரச்சினைகளிலிருந்து விடிவுகாலம் பெற்றுத்தர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மட்டுமே முடியும் என்பதைத் தெரிவித்துள்ள அருமையான முடிவாகவே இதை நான் கருதுகிறேன்...
எனது வெற்றியை எங்கள் புரட்சித் தலைவி அம்மாவிற்கு நான் அர்ப்பணிக்கிறேன்... என்றார். |