நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அல்லாஹ்வின் பேருதவியால் இவ்வாண்டு நடைபெற்று முடிந்துள்ள ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலும், நகர அளவிலும் சாதனைகள் புரிந்துள்ள மாணவ-மாணவியரை எமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் மனதாரப் பாராட்டுகிறது.
நமது மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளியின் மாணவர் A.H.அமானுல்லாஹ்வுக்கும்,
நகரளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள எல்.கே. மேல்நிலை பள்ளி மாணவர் S.D.முஹம்மத் அஃப்ரஸ்,
நகரளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ள சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி சொளுக்கு M.A.C.உம்மு சரீஹா ஆகியோருக்கும் எங்கள் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் உளவியல் பாடத்தில் 200க்கு 184 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி R.முத்துமாரியையும் எம்மன்றம் உளம் மகிழ பாராட்டுகிறது.
இந்த வெற்றிக்காக உழைத்த நகரின் அனைத்துப்பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள் மற்றும் இக்ராஃ கல்வி சங்கத்திற்கு மனமார்ந்த நன்றியை எம் மன்றம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
“மாநிலத்தின் முதலிடம்“ என்ற நமது இலக்கை நாம் நெருங்கிவிட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக நல்லதொரு முடிவை அளித்த வல்ல அல்லாஹ்வுக்கு எல்லாவற்றிற்கும் மேலாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், அல்ஹம்துலில்லாஹ்! வஷ்ஷுக்ரு லில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.L.ஸதக்கத்துல்லாஹ்,
செயற்குழு உறுப்பினர்,
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா),
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம். |