ஏப்ரல் 13 அன்று நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின. திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அனிதா 517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
வாக்கு எண்ணிக்கையின் போது காயலபட்டினத்தில் உள்ள பூத் எண் 93 (காட்டு தைக்கா தெரு) வாக்குகள் - இயந்திர கோளாறு காரணமாக விடுபட்டது. அதனையும் சேர்த்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் கீழே தரப்பட்டுள்ளது. வெற்றிபெற்ற அனிதா - அடுத்து வந்த அ.தி.மு.க. வேட்பாளர் மனோகரனை விட 640 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (தி.மு.க.) - 68,741
பி.ஆர். மனோகரன் (அ.தி.மு.க.) - 68,101
நா. ராமேசுவரன் (பா.ஜனதா) - 2,249
பா. தேவஞானசிகாமணி (பகுஜன் சமாஜ்) - 626
கொ. சுடலைகண்ணு (இந்திய ஜனநாயக கட்சி) - 534
ந. நட்டார் (ஜார்கண்ட் முக்தி மோர்சா) - 3,240
செ. அரிகோபாலகிருஷ்ணன் (சுயேச்சை) - 104
ஏ. சித்திரைலிங்கம் (சுயேச்சை) - 70
வீ. சிதம்பரம் (சுயேச்சை) - 97
சி. செல்லச்சாமி (சுயேச்சை) - 146
மு. திருப்பதி (சுயேச்சை) - 156
ஆ. நந்தகுமார் (சுயேச்சை) - 125
பி. மணி (சுயேச்சை) - 271
சீ. முத்துமாலை (சுயேச்சை) - 136
ப. முருகேசன் (சுயேச்சை) - 693
பெ. ராஜ் குமார் (சுயேச்சை) - 672
எண்ணப்பட்ட வாக்குகள் - 145,961
|