நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நடப்பாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று, இறையருளால் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு எங்கள் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், உளவியல் பாடத்தில் மாநிலத்தின் மூன்றாமிடம் பெற்ற மாணவியாக தேர்வான காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியைச் சார்ந்த ஆர்.முத்துமாரி என்ற மாணவிக்கும் எமது மன்றம் தனது பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் அனைத்துப் பள்ளிகளிலிருந்து தேர்வெழுதி, நன்மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவ-மாணவியரையும் வாழ்த்திப் பாராட்டி மகிழ்கிறோம்.
இவர்களின் வெற்றிக்காக உழைத்த நகரின் அனைத்துப்பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர், டியூஷன் ஆசிரியர்கள் மற்றும் நகர பொதுநல அமைப்புகளுக்கு எமது மன்றத்தின் தலைவர், துணைத்தலைவர், நிர்வாகக் குழுவினர் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தக்வா அமைப்பு சார்பாக,
அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து. |