ஜித்தா காயல் நற்பணி மன்றம் மற்றும் காயல் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்புகள், ட்ரூ ட்ரஸ்ட் மற்றும் சார்லி பல் மருத்துவமனையுடன் இணைந்து, “புகையில்லா காயல்” என்ற பெயரில் வாய் புற்றுநோய் தடுப்பு மற்றும் பல் நோய் விழிப்புணர்வு முகாமை, 08.05.2011 அன்று காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தின.
காயல் வெல்ஃபர் ட்ரஸ்ட் தலைவர் எஸ்.ஐ.அபூபக்கர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.ஏ.யாஸீன் இம்தியாஸ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவ்க்கி வைத்தார். ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.ஹுமாயூன் கபீர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அம்மன்றத்தின் சார்பில் ஏ.நஸீர் மன்ற செயல்பாடுகள் குறித்து சிற்றுரையாற்றினார்.
பின்னர், வாய் புற்றுநோய் குறித்தும், புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும், ட்ரூ தொண்டு நிறுவனத்தின் இயக்குனரும், சார்லி பல் மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் சார்லஸ் ப்ரேம் குமார் விரிதிரை அசைபட காட்சிகளுடன் பொதுமக்களுக்கு விளக்கினார்.
பின்னர், முகாமில் கலந்துகொண்ட மருத்துவ நிபுணர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக, நகர த.மு.மு.க. தலைவர் எம்.கே.ஜாஹிர் நன்றி கூற, கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. காயல் வெல்ஃபர் ட்ரஸ்ட் இணைச் செயலர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் டாக்டர் சார்லஸ் ப்ரேம் குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினரால் பொதுமக்களுக்கு பல் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ,
இணைச்செயலர்,
காயல்பட்டினம் வெல்ஃபர் ட்ரஸ்ட்,
காயல்பட்டினம். |