ஜுமாதுல் ஆஹிர் (1432) மாத அமாவாசை மே 3 செவ்வாய் அன்று - இங்கிலாந்து நேரப்படி காலை 6:51 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது
இந்திய நேரம் மதியம் 12:21 மணி. அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மறையும் நேரம் 6:27, சந்திரன் மறையும் நேரம் 6:34. சூரியன் மறையும்
வேளையில் சந்திரனின் வயது 6 மணி நேரம். வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் அன்று காண இயலாது.
மே 4 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:27 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:25. சூரியன் மறையும்போது சந்திரனின்
வயது 30 மணி நேரம். வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் அன்று எளிதாக காணலாம்.
மே 3 அன்று அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் தவிர உலகில் எங்கும் பிறையை அன்று காண இயலாது. மே 4 அன்று ஆப்ரிக்காவின் தென்
பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவின் தென் பகுதியிலும் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும், உலகின் பிறபகுதிகளில் வெறுங்கண்கொண்டும்
பிறையை காணலாம்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு மே 3 (அமாவாசை) அன்று ஜுமாதுல்
அவ்வல் 29 பூர்த்தி ஆகிறது. அன்று அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் பிறையை காணலாம். ஆகவே அவர்களுக்கு மே 4 - ஜுமாதுல் ஆஹிர் 1
ஆகும்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு மே 3 (அமாவாசை) அன்று ஜுமாதுல் அவ்வல் 28
முடிந்திருக்கும். மே 4 அன்று அவர்களுக்கு ஜுமாதுல் அவ்வல் 29 ஆகும். மே 4 அன்று வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில்
அன்று எளிதாக காணலாம். மே 5 அவர்களுக்கு - ஜுமாதுல் ஆஹிர் 1 ஆகும்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு மே 4 - ஜுமாதுல் ஆஹிர் 1 ஆகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross