தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்டு வரும் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்புகள் மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு) ஆகியவைகளில் சேர்ந்து பயிலும்
மாணவர்களுக்கு தொழிலாளர் நல அலுவலர், பணியாளர் அலுவலர், மனிதவள அலுவலர் போன்ற பதவிகளுக்கு இந்த பட்ட / பட்டய படிப்புகள் பிரத்யேக கல்வித்தகுதியாக தொழிற்சாலைகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு இப்பட்ட / பட்டய படிப்புகள் முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்புகளுக்கு பல்கலைக்கழக அங்கீகாரமும், பட்டயப் படிப்புக்கு தமிழக அரசின் அனுமதியும் உள்ளது. விருப்பமுள்ள +2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்கும், எதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப்படிப்பிற்கும் 31.5.2011 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இயக்குநர்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்
எண்.5 காமராசர் சாலை
சென்னை - 5.
தொலைபேசி எண். 044 28440102 / 28445778
தகவல்:
இயக்குனர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமை செயலகம், சென்னை. |