வரும் ஜூலை மாதம் 08ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை காயல்பட்டினத்தில் நடைபெறவிருக்கும் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் 07.05.2011 அன்று காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவைச் சார்ந்த கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் மூலம் இதுவரை 14 மாநாடுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளன. அம்மாநாடுகளில் பல அரிய இஸ்லாமிய இலக்கிய நூற்கள் மறுவெளியீடு செய்யப்பட்டதோடு புதிய நூற்களும் வெளியிடப்பட்டன. மேலும் இலக்கியச் செல்வர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக நமதூரில் எதிர்வரும் ஜுலை 08, 09, 10 ஆகிய மூன்று நாட்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு இன்ஷாஅல்லாஹ் சிறப்பாக நடைபெறவுள்ளது.
நமதூர் முன்னோர்கள் இயற்றிய இலக்கியங்களை மறுபதிப்பு செய்ய வேண்டும், நமதூரின் வரலாற்று சிறப்பினை இளைய தலைமுறைக்கு நினைவுபடுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே இம்மாநாட்டை நமதூரில் நடத்த வேண்டி அனுமதி பெற்றுள்ளோம்.
உலகெங்கிலும் இருந்து தமிழ் அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் இம்மாநாட்டில் சங்கமிக்க உள்ளனர்.
இம்மாநாட்டை சிறப்புற நடத்திடும் பொருட்டு 07.05.2011 சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டை நடத்தும் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக பொதுச் செயலாளர் மு.சாயபு மரைக்காயர் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.
எனவே, இக்கூட்டத்தில் இஸ்லாமிய தமிழிலக்கிய ஆர்வலர்கள் அவசியம் குறித்த நேரத்தில் கலந்து, பயனுள்ள நல்ல பல ஆலோசனைகளைத் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டம் குறித்த மேலதிக விபரங்களுக்கு, ஜனாப் காயல் அமானுல்லாஹ் அவர்களை +91 94433 42222 என்ற அவரது கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக,
காயல் அமானுல்லாஹ்,
காயல்பட்டினம். |