மாற்றுத் திறனாளிகளுக்காக காயல்பட்டினத்தில் இயங்கி வரும் நிறுவனம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி. இப்பள்ளியின் 12ஆம் ஆண்டு விழா துளிர் பள்ளி வளாகத்தில் 30.04.2011 அன்று மாலையில் நடைபெற்றது.
அப்பள்ளியின் செயலர் எம்.எல்.ஷேக்னா லெப்பை வரவேற்புரையாற்றினார். துளிர் மறுவாழ்வு திட்டப்பணிகள் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவருமான அ.வஹீதா விழாவிற்குத் தலைமையேற்று தலைமையுரையாற்றினார்.
துளிர் அறக்கட்டளை மற்றும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் நிறுவனர் எச்.எம்.அஹ்மத் அப்துல் காதிர் பள்ளியின் செயல்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக முனைவர் எம்.கலீலுல்லாஹ்வும், முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் ஜி.காதிரிய்யா ஆகியோரும், சிறப்பு பேச்சாளர்களாக ஆத்ம அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் எம்.எஸ்.ராமசுப்பிரமணியன், ஆத்ம விஷ்வாஸ் அறக்கட்டளையைச் சார்ந்த சுபா சுரேஷ் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பள்ளியின் முதல்வர் ஏ.ஜெபகிருபை ஆண்டறிக்கை வாசித்தார். பின்னர் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் மாறுவேடப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் இசட்.சித்தி ரம்ஜான் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. |