காயல்பட்டினம் மவ்லானா அப்பா சின்ன கல் தைக்கா வளாகத்தில் செயல்பட்டு வருகிறது முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி. இக்கல்லூரி மாணவியரால் உருவாக்கப்பட்ட பொருட்களடங்கிய “சன்மார்க்க சரித்திர கண்காட்சி” மே மாதம் 01, 02 தேதிகளில் நடைபெறுகிறது.
இக்கண்காட்சி குறித்து அக்கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி மாணவியரின் ஆர்வத்தில், இஸ்லாமிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நகரின் முக்கிய சரித்திரப் பகுதிகள் அழகிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அப்பொருட்கள் யாவும் கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
01.05.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பெண்களுக்கும்,
02.05.2011 திங்கட்கிழமை காலை 10.0 மணி முதல் மதியம் 01.00 மணி வரை ஆண்களுக்கும் கண்காட்சிக்கான நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துவக்க நாள் கண்காட்சியை கல்லூரியின் கண்காணிப்பாளர் (ரக்கீபா) ஹாஜ்ஜா ஒய்.எஸ்.ஃபாத்திமா பீவி துவக்கி வைக்கிறார்.
கண்காட்சி ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியையர் மற்றும் மாணவியர் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |