70 வயது தாண்டியவர் இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ள சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அது குறித்து தமிழ் நாடு மாநில ஹஜ் குழு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
மைய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட கடிதத்தின்படி 70 வயதுக்கு மேற்பட்ட புனிதப் பயணிகள், அப்பயணிகளுடன் செல்லும் சக பயணி ஒருவருக்கும் ஹஜ் 2011 முதல் ஹஜ் பயணம் மேற்கொள்ள உறுதி செய்யப்பட்ட இருக்கையினை இந்திய ஹஜ் குழு அளிக்கும் என இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
2. அதன்படி 31.03.2011 அன்று 70 வயது பூர்த்தியான புனிதப் பயணி, தம்முடன் ஒரே ஒரு சக பயணியுடன் விண்ணப்பித்தால் ஹஜ் 2011-ல் அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் அளிக்கப்படும். ஹஜ் பயணத்திற்கு ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து உறை எண்களைப் பெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட புனிதப் பயணிகள், தம்முடன் சக பயணியாக யாரை அழைத்துச் செல்ல உத்தேசித்துள்ளார் என்பதைத் தெரிவிக்குமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் அப்பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் வழங்க இயலும். திருத்தப்பட்ட இத்தகுதி குறித்த விவரங்கள், www.hajcommittee.com என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
3. 70 வயது பூர்த்தியான விண்ணப்பதாரர்கள் இதுவரையில் விண்ணப்பிக்காமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பினால், அப்படிப்பட்ட பயணிகள் தங்கள் விண்ணப்பங்களுடன், அவர்கள் ஹஜ் 2011-ல் தம்மோடு அழைத்துச் செல்ல விரும்பும் சக பயணியின் விபரத்துடன் ஹஜ் பயணம் மேற்கொள்ள உத்தேசித்துள்ளதை தனியே தெரிவித்தால், அவ்வகை பயணிகளுக்கு ஹஜ் 2011-ற்காக உறுதி செய்யப்பட்ட இருக்கை
வழங்கப்படும். இவ்வகையில் உறுதி செய்யப்பட்ட இருக்கைகள், பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள 70 வயதிற்கு மேற்பட்ட ஹஜ் பயணி மற்றும் சக பயணி ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும். 70 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் தங்களின் ஹஜ் பயணத்தை இரத்து செய்தால், எக்காரணத்தைக் கொண்டும், சக பயணிகள் தனியே புனிதப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது.
4. பொது வகையில் விண்ணப்பங்களையும் 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணிகளின் விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்கும் கடைசி தேதி 30.04.2011 ஆகும். இதில் மாற்றம் எதுவும் இல்லை.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை. |