ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் (KWAUK) சார்பில் ஏப்ரல் 30ஆம் தேதி (நாளை) நடத்தப்படவுள்ள பொதுக்குழுவையொட்டி, காயல்பட்டினம் நகர மரபுச் சொல்வழக்கை நினைவூட்டும் சொல் விளையாட்டுப் போட்டி உட்பட பல போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் மன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறையருளால் நம் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் நாளை (30.04.2011) காலை 11.00 மணிக்கு Northampton நகரில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வுகளை மெருகூட்டும் வகையில், நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல்வழக்கை நினைவுகூரும் சொல் விளையாட்டுப் போட்டிகள் சுவைபட நடத்தப்படவிருக்கிறது.
அதுபோக, அவரவர் வயதுக்கேற்ப மகிழ்வூட்டும் பல போட்டிகளும், நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
இயந்திரத்தனமான நகர வாழ்க்கையின் பரபரப்பை மறந்து மகிழ்வுற்றிருப்பதற்காக, இந்த அரிய வாய்ப்பை மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு அத்தேதியில் உங்களின் அனைத்து சொந்த வேலைகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு, கூட்டத்தில் முழுமையாகக் கலந்து மகிழவும், மகிழ்விக்கவும் அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் சார்பாக,
ஹாஃபிழ் அப்துல் மத்தீன்,
லண்டன், ஐக்கிய ராஜ்ஜியம். |