தமிழகத்தின் மூன்றாம் மாநில தேர்தல்கள் - அப்போதைய மெட்ராஸ் மாநிலத்தில், 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் - 4 நாட்களாக நடந்தது. பிப்ரவரி 17, பிப்ரவரி 19, பிப்ரவரி 21 மற்றும் பிப்ரவரி 24 ஆகிய தேதிகளில் நடந்த தேர்தலில், 206 தொகுதிகளில், 206 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
1952 மற்றும் 1957 தேர்தல்களில் நடைமுறையில் இருந்த ஒரு தொகுதி, இரு உறுப்பினர் முறை - Two-Member Constituencies (Abolition) Act, 1961- சட்டத்தின் மூலம் கைவிடப்பட்டது.
1959 ஆம் ஆண்டு நடந்த நகர்மன்றங்களுக்கான தேர்தலில்
மூன்று முக்கிய நகரங்களை தி.மு.க. - சி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி வைத்து - வென்றது. இருப்பினும் பிரதான எதிர்க்கட்சியாக வளர்ந்து வந்த தி.மு.க. வின் வாக்கு வங்கி, சென்னை உட்பட அதை சுற்றி உள்ள வட மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களிலேயே - நகர்ப்புறங்களில் மட்டும் - அமைந்திருந்தது. 1962 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கும் வேளையில் - மத்திய மற்றும் தென் மெட்ராஸ் மாநிலத்தில் - தி.மு.க. போதிய வளர்ச்சி பெறாமல் இருந்தது.
தி.மு.க. தனது வட இந்தியா எதிர்ப்பினை குறைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டி, ஈ.வே.க. சம்பத், தி.மு.க.வில் இருந்து விலகி, தனியாக தமிழ்
தேசிய கட்சியினை 1961 ஆம் ஆண்டு துவக்கினார்.
கடந்த தேர்தலை போல் - இத்தேர்தலிலும் பெரியார், காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவினை வழங்கினார்.
தனது காங்கிரஸ்க்கு ஆதராவான நிலையை விளக்கிய காமராஜர் கூறியதாவது
எனக்கு வயதாகிவிட்டது. நீண்ட நாள் நான் வாழமாட்டேன். எனக்கு பிறகு தமிழர் உரிமையை காமராஜர் தான் பாதுகாப்பார். அவர்தான் என் வாரிசு. மொத்தத்தில் காமராஜர் தான் முக்கியம், பிறர் அல்ல. வேட்பாளர்களோ, வாக்காளர்களோ - எது சரி, எது தவறு என அறியக்கூடிய சக்தி இல்லாதவர்கள். நான் சொல்வதை கேளுங்கள். காங்கிரஸ்க்கு வாக்களியுங்கள். நீங்கள் நன்றாக இருப்பீர்கள். இல்லை என்றால், தி.மு.க. துணையுடன் ராஜாஜி - உங்களை எந்த இரக்கமும் இன்றி நசுக்கிடுவார்.
தி.மு.க. - ராஜாஜியின் சுதந்தரா கட்சியுடனும், முத்துராமலிங்க தேவரின் பார்வர்ட் பிளாக் கட்சியுடனும், முஹம்மது இஸ்மாயில் சாஹிபின் முஸ்லிம் லீக் கட்சியுடனும், சி.பி.ஐ. கட்சியுடனும் கூட்டணி அமைத்தது.
எம்.ஜி.ஆர். தி.மு.க.விற்க்காக தீவிரமாக பிரசாரம் செய்தார். நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டார். சிவாஜி கணேசன் - தமிழ் தேசிய கட்சிக்கு தனது ஆதரவினை வழங்கினர். காங்கிரஸ் கட்சி - தனக்கு ஆதரவாக, வாக்குரிமை என்ற பெயரில், முன்னணி நடிகர்களை கொண்டு, திரைப்படம் ஒன்றினை தேர்தலுக்கு முன் வெளியிட்டது.
798 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில், மொத்த சுமார் 1 கோடியே, 86 லட்ச வாக்காளர்களில் – 70.65 சதவீத வாக்காளர்கள், தங்கள் வாக்கினை அளித்தனர்.
திருசெந்தூர் தொகுதியில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 101,280. இதில் 69,967 வாக்காளர்கள் (69.08 சதவீதம்) தங்கள் வாக்கினை அளித்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர் எம்.எஸ்.செல்வராஜன் 39,944 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். நாம் தமிழர் கட்சியை சார்ந்த பீ.ஏ. ஆதித்தனார் 27,944 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
சுயேச்சை வேட்பாளர்கள்
- என்.கே.கஸ்ஸாலி மரைக்கார் 569 வாக்குகளும்,
- பீ.ஞானராஜ் 361 வாக்குகளும்,
பெற்றனர்.
மாநிலத்தின் 206 இடங்களில் காங்கிரஸ் 139 இடங்கள் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மீண்டும் காமராஜர் முதல்வரானார்.
திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) 50 இடங்களை வென்றது.
சுதந்தரா கட்சி 6 இடங்களும், பார்வர்ட் பிளாக் 3 இடங்களும், சி.பி.ஐ. கட்சி 2 இடங்களும், சோசியலிஸ்ட் கட்சி 1 இடமும், சுயேட்சைகள் 5 இடமும் இத்தேர்தலில் வென்றனர்.
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3]
[பாகம் 4] [பாகம் 5] [பாகம்
6]
[தொடரும்]
|