ஹாங்காங் நாட்டில் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் 10.04.2011 அன்று கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் காயல்பட்டினத்தைச் சார்ந்த வீரர்களை உள்ளடக்கிய அணிகளும் பங்கேற்றுள்ளன. போட்டி விபரம் பின்வருமாறு:-
கடந்த 10.04.2011 அன்று ஹாங்காங் நாட்டில் உள்ளூர் விடுமுறையையொட்டி, வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது.
பெரும்பாலும் தமிழர்களையும், குறிப்பாக காயலர்களையும் உள்ளடக்கி,
எஸ்.எச்.ரியாஸ் தலைமையில் காயல் யுனைட்டெட் சிக்ஸ்,
ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் தலைமையில் என்.எச்.சிக்ஸ்.,
யு.இம்ரான் தலைமையில் யு.எஸ்.ஸி. சிக்ஸ்,
எஸ்.அர்ஷத் தலைமையில் மிலிட்டரி சிக்ஸ்,
ஹாஃபிழ் மழ்ஹர் தலைமையில் காயல் ராக்கர்ஸ் சிக்ஸ்
ஆகிய ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
ஒவ்வோர் அணியும் மற்ற அனைத்து அணிகளுடனும் விளையாடும் வகையில் ரவுண்ட் ராபின் முறையில் இப்போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளின் இறுதியில் மிலிட்டரி சிக்ஸ் மற்றும் காயல் யுனைட்டெட் சிக்ஸ் ஆகிய அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றன. அதில் மிலிட்டரி சிக்ஸ் இறுதிப்போட்டியில் வென்று 700 ஹாங்காங் டாலர் தொகையை முதல் பரிசாக தட்டிச் சென்றது. இப்பரிசுகளை ராம், ராகேஷ், அனுப் ஆகியோர் வழங்கினர்.
இறுதிப்போட்டியில் வெற்றிக்கு முனைந்த அணியான காயல் யுனைட்டெட் சிக்ஸ் அணிக்கு ஹாங்காங் டாலர் 500 தொகை பரிசுப்பணமாகக் கிடைத்தது. இப்பரிசை லெப்பை கனி வழங்கினார்.
மூன்றாமிடத்தைப் பெறும் அணிக்காக நடத்தப்பட்ட போட்டியில் என்.எச்.சிக்ஸ் மற்றும் காயல் ராக்கர்ஸ் சிக்ஸ் அணிகள் பங்கேற்றன. அதில் காயல் ராக்கர்ஸ் அணி வெற்றிபெற்று மூன்றாமிடத்தைப் பெற்றது.
இப்பரிசளிப்பு விழாவின்போது, இதற்கு முன் வி-யுனைட்டெட் சார்பில் நடத்தப்பட்ட பாட்மிண்டன் போட்டியில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணியினருக்கும் பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.
அப்போட்டியில் வெற்றி பெற்றோருக்கான கோப்பையை ராகேஷ், அனுப் இணைக்கு ஹமீத் அப்துல் காதிர் வழங்கினார். இரண்டாமிடம் பெற்ற ராம், ஜெரோம் இணைக்கான பரிசுக்கோப்பையை எஸ்.எச்.ரியாஸ் வழங்கினார்.
போட்டிகள் அனைத்திலும் பங்கேற்ற, பார்வையாளர்களாகக் கலந்துகொண்ட அனைவருக்கும் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தகவல்:
வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பாக,
அலீ ஃபைஸல்,
தஸ்லீம் மற்றும்
அர்ஷத்,
ஹாங்காங். |